டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட அண்ணா -கலைஞர் அறிவாலயம்! ஏ டூ இசட் ஏற்பாடுகள்! பின்னணியில் யார்?
டெல்லி: டெல்லியில் அண்ணா -கலைஞர் அறிவாலயம் நேற்று திறப்பு விழா கண்ட நிலையில், அதற்காக அங்கு பல மாதங்களாக பார்த்து பார்த்து பணிகளை செய்தவர்களில் திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளர் அண்ணா நகர் கார்த்திக்கும் ஒருவர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மன ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப கட்டிடத்தின் டிசைனை உருவாக்கியது முதல் உள் அலங்கார வேலைப்பாடுகள் வரை மெனக்கெட்டு செயல்பட்டிருக்கிறார் அவர்.
இவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தாலும் கூட சபரீசனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் அலுவலகம்
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா -கலைஞர் அறிவாலயத்தின் கலை நுணுக்கமான கட்டுமானப் பணியின் பின்னணியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் அண்ணா நகர் கார்த்திக் முக்கிய பங்கு வகிக்கிறார். பல மாதங்களாக கட்டிடத்தை கலை நுணுக்க வேலைபாடுகளுடன் செதுக்கி முதலமைச்சரின் ஸ்டாலினின் மனதிற்கு பிடித்தாற்போல் வடிவமைத்துக் கொடுத்து அவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.

கலை நுணுக்கம்
குறிப்பாக இரவு நேரத்தின் போது ஒளிரவிடப்பட்டும் விளக்குகள் கட்டிடத்தின் அழகை மேலும் மெருகேற்றி அரச மாளிகையை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது அண்ணா -கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள் பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. கூட்ட அரங்கம், நூலகம், என கட்டிடத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கலை நுணுக்கம் வெளிப்படுவதை காண முடிகிறது.

விழா ஏற்பாடுகள்
அதேபோல் அண்ணா -கலைஞர் அறிவாலயத்தின் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுகவின் ஆஸ்தான மாநாடு பந்தல் அமைப்பாளரான பந்தல் சிவா கவனித்துக்கொண்டார். வாழைமரங்களையும், தோரணங்களையும் கட்டி அங்கு சென்றவர்களை நாம் இருப்பது டெல்லியிலா இல்லை தமிழகத்திலா என யோசிக்க வைக்கும் அளவுக்கு அங்கு பிரம்மாண்டம் காட்டியிருந்தார் பந்தல் சிவா. ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் போன்ற தேசியத் தலைவர்கள் பலரது கவனத்தை இது ஈர்த்திருந்தது.

அமைச்சர் எ.வ.வேலு
இதனிடையே அமைச்சர் எ.வ.வேலுவும் டெல்லியில் அமைந்துள்ள திமுக அலுவலகத்திற்காக சிரமேற்கொண்டு பல்வேறு பொறுப்புகளை கவனித்துக்கொண்டார். கட்டிட கட்டுமாணப் பணிகளை தொடர்ந்து கேட்டறிந்து அதனை விரைவுப்படுத்தி முடித்ததில் அவருக்கும் பங்குண்டு. மொத்தத்தில் கருணாநிதி காலத்தில் கூட நிகழாத ஒரு காரியத்தை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் எனக் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications