காஷ்மீரில் பெரிய விஷயம் நடக்க போகிறது.. பாஜக மறைக்கிறது.. காங்கிரஸ் தலைவர்கள் திடுக் பேட்டி!
காஷ்மீரில் விவகாரத்தில் மத்திய அரசு மக்களிடம் பொய் சொல்கிறது, காஷ்மீரில் மத்திய அரசு பெரிய விஷயம் எதையோ செய்ய திட்டமிட்டு உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
டெல்லி: காஷ்மீரில் விவகாரத்தில் மத்திய அரசு மக்களிடம் பொய் சொல்கிறது, காஷ்மீரில் மத்திய அரசு பெரிய விஷயம் எதையோ செய்ய திட்டமிட்டு உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டு வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அங்கு 75000 வீரர்கள் புதிதாக குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ராணுவ குவிப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் திக் விஜய் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பேட்டி அளித்தனர்.

என்ன பேட்டி
அவர்கள் அளித்த பேட்டியில், பாஜகவிற்கு காஷ்மீரை மொத்தமாக கைப்பற்ற திட்டம். அவர்களுக்கு காஷ்மீர் வேண்டும். ஆனால் அவர்களுக்கு காஷ்மீரிகள் வேண்டாம். அங்கு இருக்கும் மக்களை பற்றி அவர்கள் கொஞ்சம் கூட கவலை அடைய மாட்டார்கள். அங்கு இருக்கும் சில இளைஞர்களின் மனதில் பாஜக நஞ்சை விதைத்துள்ளது.

நம்ப முடியாது
இந்த அரசை எங்களால் நம்ப முடியாது. தினமும் காஷ்மீரில் சிறு சிறு தாக்குதல்கள் நிறைய நடக்கிறது. ஆனால் அப்போதெல்லாம், காஷ்மீரில் ராணுவம் இப்படி குவிக்கப்பட்டது இல்லை. இப்போது அமர்நாத் யாத்திரையை தடுத்தி நிறுத்தி, ராணுவத்தை குவிக்கிறார்கள் என்றால், பின்புலத்தில் ஏதோ இருக்கிறது.

ஏன்
இப்போது அங்கு புதிதாக 35 ஆயிரம் வீரர்களை ராணுவம் குவித்து இருக்கிறது. இது சாதாரண விஷயம் கிடையாது. பாஜக எதையோ பெரிதாக திட்டமிட்டுள்ளது . அதற்கான அறிகுறிதான் இது. காஷ்மீரில் பாஜக அரசு எதையோ யோசிக்க முடியாத விஷயம் ஒன்றை செய்ய போகிறது.

இல்லை
அவர்கள் பெரிய திட்டம் எதையோ போட்டு இருக்கிறார்கள். அதனால்தான் இப்படி பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார்கள். ஆனால் தீவிரவாத தாக்குதல், பாதுகாப்பு அதிகரிப்பு என்று பொய் சொல்கிறார்கள். காஷ்மீரில் கை வைத்தால், பாஜக மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications