பாலியல் தொழிலாளிகள் எங்கு அதிகம்? டாப் 3ல் இடம்பிடித்த தென்மாநிலங்கள்.. தப்பிய தமிழ்நாடு.. லிஸ்ட்
டெல்லி: இந்தியாவில் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான சில முக்கிய தகவல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் டாப் 3ல் தென்மாநிலங்கள் உள்ளன. இதில் அதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு தப்பியது.
இந்தியாவில் எச்ஐவியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.
இதன் ஒருபகுதியாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் சில ஆய்வுகள் மேற்கொண்டது. அதன்படி புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள், பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

2 வகைகளில் மாநிலங்கள் வரிசை
இந்நிலையில் தான் இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அடிப்படையிலும், பூர்வீகம் + புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள் என 2 வகைகளில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

3 இடங்களில் தென்மாநிலங்கள்
அதன்படி பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் தென்மாநிலங்கள் உள்ளன. அதன்படி 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்களுடன் அண்டை மாநிலமான ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. 1.16 லட்சம் ஆந்திராவில் 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர், அதைத் தொடர்ந்து கர்நாடகா (1.16 லட்சம்) மற்றும் தெலங்கானாவில் (1 லட்சம்) உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.

இந்தியாவில் எங்கு அதிகம்?
அதன்படி புலம் பெயர்ந்த மற்றும் பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 6.6 லட்சம் பேர் பாலியல் தொழில் செய்கின்றனர். இதன்மூலம் இந்தியாவில் அதிக பாலியல் தொழிலாளர்கள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2.3 லட்சம் பாலியல் தொழிலாளர்களுடன் குஜராத் 2வது இடத்திலும், குஜராத்தை விட சற்று குறைந்து டெல்லி 3வது இடத்திலும் உள்ளது.

ஆந்திராவில் கடத்தல் அதிகம்
மேலும் வடமாநிலங்களில் புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். தென்மாநிலங்களில் புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்கள் குறைவாக உள்ளதோடு, பூர்வீகமாக வசிப்பவர்கள் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆந்திரா பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ராம்மோகன் கூறுகையில், ‛‛ஆந்திராவில் பாலியல் தொழிலுக்காக அதிகளவில் கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. இது பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. இதனால் ஆந்திராவில் புலம்பெயர் பாலியல் தொழிலாளர்கள் உள்பட பிற அம்சங்களின் அடிப்படையில் கணக்கிட்டால் அதிக பாலியல் தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக ஆந்திரா மாறலாம். ஏனென்றால் தற்போதைய புள்ளி விபரம் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களை மட்டுமே குறிக்கின்றன. இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் அடையாளம் காணப்படவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications