கல்வித்துறை கண்ணை மூடிக்கொண்டுள்ளதா? சென்னையில் மீண்டும் நெட் தேர்வு.. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மிக்ஜாம் புயல், பெரு வெள்ளம் நாட்களில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் நெட் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Su Venkatesan MP insisted in Parliament that NET exam should be conducted again in 4 districts including Chennai

மழை: கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

வெள்ளம்: ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ தான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.

இணைய சேவை: டிச.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை சென்னை முழுவதும் செல்போன் இணைப்புகள் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே மீட்பு பணிகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக செல்போன் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், மத்திய அரசின் டெட் தேர்வு குறித்து விமர்சனங்கள் மேலெழுந்திருக்கின்றன.

தேர்வு: அதாவது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான படிப்புகளுக்கு நடத்தப்படும் நெட் தேர்வினை மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழு நடத்துகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வானது 06.12.2023 முதல் 22.12.2023 வரை கணினி வழி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

வலியுறுத்தல்: எனவே இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டதால், ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுர நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய சு.வெங்கடேசன்,

நிவாரணம்: “கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த பேரிடரில் இருந்து மக்கள் உடனடியாக மீள வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ரூ.5060 கோடி சிறப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். மத்திய அரசு உடனடியாக இந்த உதவியை தமிழகத்துக்கு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு: திட்டமிடப்படாமல் பெரும் வீக்கத்திற்கு உள்ளாகி இருக்கக் கூடிய பெருநகரங்களில் ஒன்று சென்னை. பேரிடரின் மிக முக்கியமான சுவாசம் உடனடியான நிவாரணம்தான். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த நிவாரணத்தை வழங்க வேண்டும். மூன்று தொழில்பேட்டைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக ஜிஎஸ்டி செலுத்தக்கூடிய மாநிலங்களில் முதன்மையான தமிழகம். எனவே எம்.எஸ்.எம்.இ செக்டாருக்கு இருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்த அவையிலே நான் வலியுறுத்துகிறேன்.

மீண்டும் நெட்: அதேபோல கடந்த 4ம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு டெட் தேர்வை சென்னையிலே நடத்தி இருக்கிறது. நாட்டிலே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் துறையாக கல்வித்துறை இருக்கிறதா என்று கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். யுஜிசியின் இந்த நடவடிக்கையால் பல்வேறு மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுத முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே யுஜிசி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த தேர்வை மீண்டும் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+