பிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்!
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவே சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது.
தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவின் 3-ஆவது அலை பரவ வாய்ப்புள்ளதாகவே மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமி
இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறுகையில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இதையே நான் இரு தினங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

மூன்றாவது அலை
இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் மூன்றாவது அலையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். நமக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.

கண்காணிப்பு குழு
அவர்களுக்கு பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தற்போதைய தேவை என மத்திய அரசை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். கடந்த சில காலமாக பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராகவே பேசி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.

கையிருப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் தனியார், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அட்மிட் ஆக படுக்கைகள் இல்லை. அத்துடன் மூச்சுத்திணறலோடு வரும் நோயாளிக்கு கொடுக்க ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் கையிருப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications