பிரதமரை சோனியா காந்தி “பிளாக்மெயில்” பண்றாரா? மோடி, அமித்ஷா மீது வழக்கு போடுவேன்.. சு.சுவாமி பரபர!
டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய குடிமகன் அல்ல என மீண்டும் கூறியுள்ள பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ராகுல் காந்தியை பாதுகாக்கும் நடவடிக்கையை மோடி தொடர்ந்தால், அவர் மீதும் அமித் ஷா மீதும் வழக்கு தொடருவேன் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ராகுல் காந்தி இந்தியக் குடிமகன் இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அவரது புகாரைத் தொடர்ந்து மத்திய அரசு, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், முன்பு தான் தாக்கல் செய்திருத்த புகார் கடிதத்தின் நகலுடன், பிரிட்டன் அரசிடம் ராகுல் காந்தி சமர்ப்பித்துள்ளதாக கூறி ஒரு வருமான வரி படிவத்தின் நகலையும் இணைத்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார் முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி.
சுப்பிரமணியன் சுவாமி இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2003ஆம் ஆண்டு பிரிட்டன் குடியுரிமையைப் பெற்ற ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டவர். அப்படி இருக்கையில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல் காந்தியை பாதுகாப்பது ஏன்?

ராகுல் காந்தி லண்டனில் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஆகவே, அவருடைய இந்திய குடியுரிமை தகுதியற்றது. ராகுல் காந்தியை பாதுகாத்து வரும் நடவடிக்கையை மோடி தொடர்ந்தால், அவர் மீதும் அமித் ஷா மீதும் வழக்கு தொடருவேன். ராகுல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சோனியா காந்தியால் மோடி பிளாக் மெயில் செய்யப்பட்டாரா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜகவில் இருந்தாலும், பிரதமர் மோடியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அந்தவகையில் ராகுல் காந்தி குடியுரிமை விவகாரத்தை முன்வைத்தும் பிரதமர் மோடியை சாடியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
சமீபத்தில் வங்கதேசத்தில் அமைதியின்மை குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, பங்களாதேஷ் பெண் பிரதமரை முஸ்லிம்கள் வெளியேற்றும் போது மோடி நடுங்குகிறார். மோடியை பதவி விலகச் சொல்லுங்கள்" என்று அவர் கூறியிருந்தார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications