ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும்
டெல்லி: ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பல கோடி மக்கள் ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், அதன் புக்கிங் சிஸ்டத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன. இதற்கிடையே அந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் ஒரு புதிய பிரம்மாண்ட அப்டேட் புக்கிங் சிஸ்டத்தில் வரவுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தினமும் 2.3 கோடி பயணிகள் பயன்படுத்தும் இந்திய ரயில்வே, 1986ஆம் ஆண்டில் இருந்தே பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) எனப்படும் புக்கிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வருகிறது. இது பல ஆண்டுகளாகச் சிக்கல்களைச் சந்தித்து வந்தது. தட்கல் முன்பதிவின்போது அடிக்கடி ஆஃப் செயலிழப்பது, 30 வினாடி தாமதங்கள் மற்றும் bots ஊடுருவல் என ஏகப்பட்ட பிரச்சனை இருந்தது.

புதிய சிஸ்டம்
ஒவ்வொரு நாளும் இது தலைவலியையே கொடுத்து வந்தது. இந்தச் சூழலில் தான் பழைய சிஸ்டத்தை மாற்றியமைத்து, 5 மடங்கு வேகமாக, அதிக இணையப் பாதுகாப்புடன், எளிதாக விரிவாக்கக்கூடிய அடுத்த தலைமுறை சிஸ்டம் அறிமுகமாகவுள்ளது.
அதாவது தற்போதைய PRS அமைப்பு நிமிடத்திற்கு 8,000 டிக்கெட்டுகளை கையாளும் நிலையில், புதிய அமைப்பு கிளவுட்-நேட்டிவ் மைக்ரோ சர்வீசஸ் கட்டமைப்பு மூலம் ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்களை கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், தட்கல் டிக்கெட் புக்கிங் நேரம் 30 வினாடிகளிலிருந்து 3-5 வினாடிகளாகக் குறையும்.
தட்கல் பிரச்சனை
அதேபோல இப்போது எல்லாம் தட்கல் டிக்கெட் போடும்போது, ஏஐ பாட்கள் உள்ள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இதனால் உண்மையாகவே டிக்கெட் கிடைக்க வேண்டிய மக்களுக்கு அவை கிடைப்பதில்லை. இந்த பாட்டுகளைக் கண்டறிந்து அதை முடக்கும் தொழில்நுட்பமும் இந்த புதிய சிஸ்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்கும். அதிக தேவை உள்ள புக்கிங்களுக்கு ஆதார் OTP மற்றும் முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டு, எண்டு-டு-எண்டு என்க்ரிப்ஷன் மூலம் இணைய அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும்.
பண்டிகை காலம்
குபெர்னெட்ஸ் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த கிளஸ்டர்கள் மூலம் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக டிக்கெட்கள் கையாள முடியும். இது தற்போதைய 2 கோடி தினசரி பரிவர்த்தனைகளை விட 10 மடங்கு அதிகமாகும். PRS, UTS மற்றும் இ-டெண்டரிங் ஆகியவற்றை "ரயில்ஒன் சூப்பர் ஆப்" (RailOne super-app) என்ற ஒற்றை தளத்தில் இணைத்து, டிக்கெட், ரத்து, பணத்தைத் திரும்பப் பெறுதல், PNR நிலை, கோச் இருப்பிடம் போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஒரே உள்நுழைவை இது வழங்கும்.
ஆதார் வெரிபை செய்யப்பட்ட பயனர்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை டிக்கெட்களை புக்கிங் செய்யலாம். சரிபார்க்கப்படாத யூசர்கள் இரண்டாம் நாளிலிருந்து முன்பதிவு செய்ய வேண்டும். இதுவே மோசடியை ஓரளவுக்குத் தடுக்கும். லைவ் கோச் ஸ்டேடஸ், பிளாட்ஃபார்ம் எண்கள், ரயில் டிக்கெட் கட்டண விவரம் என எல்லாமே இருக்கும். அதேபோல காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளின் உறுதிப்படுத்தும் சான்ஸும் கணிசமாக மேம்படும்.
நன்மை
இந்த புதிய திட்டத்தின் மூலம் மோசடிகள் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு சுமார் ₹60,000 கோடி பாதுகாக்கப்படும். ₹500 கோடி மதிப்பிலான தட்கல் கருப்புச் சந்தை தடுக்கப்படும். மேலும், பிரீமியம் ரயில்களில் மாறும் விலை நிர்ணயம் செய்வதன் மூலம் ₹5,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள 40% பயனர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லாததால், டிஜிட்டல் இடைவெளி ஒரு பெரிய சவாலாக உள்ளது. கவுண்டர் டிக்கெட்டிங் சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
இது வெறுமன வழக்கமான சாப்ட்வேர் மேம்பாடு மட்டுமல்ல, இந்திய ரயில்வேயின் டிஜிட்டல் காலத்தின் எதிர்காலம்! இந்த புதிய சிஸ்டம் 2047க்குள் 50,000 அதிவேக ஹைப்பர்லூப் ரயில்களின் எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1986ன் 2G டிக்கெட்டிங்கிலிருந்து 2026ன் 6G டிக்கெட்டிங்கிற்கு இந்தியா முன்னேறுகிறது. இது பண்டிகை காலங்களில் ரயில்களை பயன்படுத்தும் பல கோடி இந்தியர்களுக்கு வரபிரதாகமாகவே அமையும்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications