டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும் அடுத்த வாரம் பட்டியலிடப்படும்: உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த வாரம் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.

அதன் பின்னர் அவர்களில் 75% பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். 25 பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும்.

அக்னிபாத் திட்டம்.. இன்று முதல் ராணுவம், கடற்படையில் சேர விண்ணப்பம்! அக்னிபாத் திட்டம்.. இன்று முதல் ராணுவம், கடற்படையில் சேர விண்ணப்பம்!

அக்னிபாத்

அக்னிபாத்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ராணுவத்திற்கு ஆட்சேர்பு எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்தச் சூழலில் மத்திய அரசு இப்படியொரு திட்டத்தை அறிவித்தது ராணுவத்திற்குத் தயாராகும் வீரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அக்னிபாத் வீரர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்காது என்பதால் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 போராட்டம்

போராட்டம்

இந்தத் திட்டம் அறிவித்தது முதலே வடமாநிலங்களில் பெரும் போராட்டம் நடைபெற்றது. முதலில் பீகார் மாநிலத்தில் தொடங்கிய போராட்டம் பின்னர், பல மாநிலங்களிலும் முழுக்க பரவியது. பல இடங்களில் ரயில்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு அக்னிபாத் வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தன.

 மத்திய அரசு

மத்திய அரசு

துணை ராணுவப் படை, விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்டவற்றில் அக்னிபாத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் அக்னிபாத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக இருந்தது. அதேபோல அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.

Recommended Video

    LCA Tejas-ஐ வாங்க துடிக்கும் Egypt | IAF Chief கொடுத்த Alert| Dhruv Mark 3 | Agnipath |*DefenceWrap
    வழக்கு

    வழக்கு

    மக்கள் போராட்டம் ஒருபுறம் என்றால் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடப்பட்டது. இந்தச் சூழலில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளும் அடுத்த வாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    English summary
    Supreme Court agrees to list next week a petition challenging the Agnipath scheme
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X