நாங்க நிவாரணம் கொடுத்தா நீங்க சவுக்கு சங்கரை வேற கேஸ்ல ஜெயில்ல தள்றீங்க! ஏன் இப்படி?: உச்சநீதிமன்றம்
டெல்லி: சவுக்கு சங்கர் மீது 2 வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தியது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு நாங்கள் ஒரு வழக்கில் நிவாரணம் கொடுத்தால் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள் என தமிழ்நாடு அரசை சாடியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரியளவில் சர்ச்சைக்கு உள்ளாகின. பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூபரான் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சவுக்கு சங்கர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனது மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில், பாலாஜி ஸ்ரீநிவாசன், கே.கவுதம் குமார் மற்றும் ஹர்ஷா திரிபாதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, சவுக்கு சங்கர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், எவ்வித காரணங்களும் இன்றி, இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. முதல்முறை பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மூன்று நாட்களில் மீண்டும் அந்தச் சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 வழக்குகளை எதிர்த்து தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தில், அவரை போதைப்பொருள் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளனர். புலனாய்வு செய்தியாளரான சவுக்கு சங்கர், எந்தவித பயமும் இன்றி ஆளுங்கட்சியின் ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார்.
எனவே, சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை ஆகிவிடக் கூடாது என்று மாநில அரசு அஞ்சுகிறது. எனவே, அவர் மீது மோசடியான குற்றச்சாட்டுக்களை கூறி சிறையில் அடைக்க முயற்சிக்கிறது. சவுக்கு சங்கர் தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை, எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் 72க்கும் அதிகமாக சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் சங்கர் மீதான குண்டர் சட்ட வழக்கையும், இந்த வழக்கையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்க்க கூடாது. தனித்தனியாகத்தான் வழக்கை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம். சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளி வருகிறார். பிறகு மீண்டும் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள். ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள்? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய நாளில், சவுக்கு சங்கர் தொடர்புடைய வழக்குகள் ஒன்றாக விசாரிப்பதா தனித்தனியாக விசாரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications