சிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
Recommended Video
டெல்லி : கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாருக்கு ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், அப்படியே சிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ண வேண்டாம் என அமலாக்கத்துறையை கண்டித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே. சிவகுமாரை அமலாக்கத்துறை சட்டவிரோத பணமோசடி வழக்கில் கைது செய்தது.

இந்த வழக்கில் ஒரு மாதங்களுக்குமேலாக சிறையில் இருந்த டி.கே. சிவகுமாருக்கு கடந்த அக்டோபர் 23ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி சிறையில் இருந்து வெளியே வந்து தற்போது பெங்களூருவில் உள்ள இல்லத்தில் வசித்து இருக்கிறார்.
இந்நிலையில் டி.கே. சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் நாரிமன் மற்றும் ரவீந்திர பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் வழக்கில் உள்ளவற்றை திருத்தம் கூட செய்யாமல் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ண வேண்டாம் என்ற கூறி அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அத்துடன் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று டி.கே. சிவகுமார் தொடர்ந்த வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications