கனவார் யாத்திரைக்காக சர்ச்சை உத்தரவு.. உ.பி, உத்தரகாண்ட் அரசுக்கு கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: சிவபக்தர்கள் கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்களில், அதன் உரிமையாளர் யார் என்கிற பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என உ.பி, உத்தரகாண்ட் உள்ளிட்ட அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஆண்டுதோறும் காவடி திருவிழா நடைபெறும். இதனை கன்வார் யாத்திரை என்று கூறுவார்கள். சிவ பக்தர்கள் காவடியை சுமந்துக்கொண்டு புனித நதியாக கருதப்படும் கங்கைக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து புனித நீரை கலங்களில் கொண்டு செல்வார்கள். இப்படி கொண்டு செல்லப்படும் புனித நீரை கொண்டு தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வார்கள். இப்படியாக இந்த ஆண்டுக்கான காவடி திருவிழா தற்போது தொடங்கியுள்ளது.

ஆனால் இந்த முறை, கங்கை நோக்கி செல்லும் பக்தர்களுக்காக, இந்த வழித்தடங்களில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயர் பலகைகளிலும், அதன் உரிமையாளர் பெயர், மொபைல் நம்பர் மற்றும் முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்டமாக முசாஃபர் நகர் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்கள் மீதான பொருளாதார தடைகளுக்கு சமமாக இந்த உத்தரவு இருக்கிறது என விமர்சித்துள்ளனர். பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்திலிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, "மதம் மற்றும் சாதிய ரீதியில் எந்த உத்தரவும் இருக்கக்கூடாது. உ.பியின் பைசாஃபாத் நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் எனவே அதை வாபஸ் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பஸ்வான், "சாதி, மதம் அடிப்படையிலான எந்த பிளவையும் ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில், "இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்பதை நோக்கமாக கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது" என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறியுள்ளார்.
இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்திருந்தாலும், உத்ரகாண்டிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. ஹரித்துவாருக்கு காவடி எடுத்துச் செல்வோருக்கு உதவியாக இந்த உத்தரவு இருக்கும் என்று அம்மாநில ஆளும் கட்சி தலைவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசுகளின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மாநில அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த உத்தரவுகளை மத பாகுபாட்டை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், உரிமையாளர்கள் யார் என்பதை தெரிந்துக்கொண்டு அதை புறக்கணிக்க இந்த உத்தரவு வழிவகை செய்வதாகவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து மாநில அரசின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடையை நீதிபதிகள் விதித்தனர். மேலும், இது குறித்த விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications