எத்தனை கேஸ்ல தண்டனை வாங்கி கொடுத்தீங்க? அமலாக்கத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) வழக்குகளில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது? அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது? என உச்சநீதிமன்றம் இன்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கை சுட்டிக்காட்டி, அமலாக்கத்துறை பதிவு செய்த பண மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டும் இதுவரை அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ் ஓகா, நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை விசாரித்தது. அப்போது, அமலாக்கத்துறையின் வழக்கறிஞரிடம் வாய்மொழியாக, "அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) வழக்குகளில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளன, எத்தனை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்துள்ளீர்கள் என நீங்கள் கண்டறிந்து சொல்ல வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜாமீன் கோரியுள்ள நபர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். ஆனால், இதுவரை விசாரணை தொடங்கவில்லை, எப்போது விசாரணை தொடங்கும் என்றும் தெரியவில்லை எனக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
அமலாக்கத்துறை விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வழக்கின் விசாரணையின்போதும் உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக அமலாக்கத்துறைக்கு அதிருப்தி தெரிவித்து இருந்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை தொடர்ந்து 5,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே அமலாக்கத்துறையால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான புலன் விசாரணையின் தொடர்ச்சி என்றே பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
பாஜக ஆட்சியில், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன. சமீபகாலத்தில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் செந்தில் பாலாஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பலரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications