மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்! "நீங்கள் ஒன்றும் அப்பாவி இல்லை!" ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்! பரபர
டெல்லி: கொரோனா காலத்தில் மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில் பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட போதிலும் அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் நமது நாட்டில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்ட கரோனில் என்ற மருந்து காரணமாகவே சர்ச்சை எழுந்தது.

பதஞ்சலி: கொரோனா பரவல் நமது நாட்டில் உச்சத்தில் இருந்த சமயத்தில் பதஞ்சலி 2021இல் கரோனில் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. கொரோனாவை குணப்படுத்தும் முதல் மருந்து என்று அவர் விளம்பரப்படுத்தினார். உரிய ஆதாரம் இல்லாமல் இதுபோல விளம்பரப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் அப்படி விளம்பரப்படுத்தினார்கள். இதுவே பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இதற்கு முன்பே சுப்ரீம் கோர்ட் பாபா ராம்தேவ் குறித்தும் பதஞ்சலி நிறுவனம் குறித்தும் மிகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து இருந்தது. மேலும், பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆகியோரை நேரில் ஆஜராகுவம் உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இருவரும் ஆஜராகினர்.
மன்னிப்பு: அப்போது பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. கொரோனா காலகட்டத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக யோகா குரு ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். எங்களிடம் இருக்கும் மாற்று மருத்துவ முறை இருப்பதாக மட்டுமே நாங்கள் கூறினோம் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "உங்களுக்குக் கண்ணியம் இருக்கிறது. யோகாவுக்காக நீங்கள் நிறையச் செய்திருக்கிறீர்கள்.. யோகாவை மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு விஷயங்களைச் செய்துள்ளார்கள். ஆனால், தனியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இப்படிச் செய்வதை ஏற்க முடியாது" என்றார்கள். அப்போது பாபா ராம்தேவ் தரப்பு, செய்த தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தாயாராக இருப்பதாகத் தெரிவித்தது.
நீதிபதிகள்: டென்ஷன்: அப்போது சுப்ரீம் கோர்ட், "நீதிமன்ற உத்தரவை மீறி, நீங்கள் விளம்பரத்தை வெளியிட்டு ஆதாரம் இல்லாத தகவல்களைக் கூறி இருக்கிறார்கள்.. ஆயுர்வேதம் என்பது நமது நாட்டில் மகரிஷி சாரகர் காலத்திலிருந்தே உள்ளது. ஆனால், உங்கள் மருந்துகளை விளம்பரப்படுத்த ஏன் பிற மருத்துவ முறைகளைக் குறித்து தவறாகப் பேசுகிறார்கள்" என்றார்.
அதுபோன்ற எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் 5,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு செய்த பிறகே இதைச் சொன்னதாகப் பாபா ராம்தேவ் தரப்பு தெரிவித்தது. இதைக் கேட்டு டென்ஷனான சுப்ரீம் கோர்ட், "நாங்கள் உங்கள் நடத்தையைப் பற்றிப் பேசுகிறோம். நீங்கள் எங்களின் உத்தரவை மீறியதால் உங்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார்.
அப்பாவி இல்லை: ஒரு ஆர்வத்தில் நவீன மருத்துவம் குறித்துப் பேசிவிட்டோம் என்றும் இனி கூடுதல் கவனத்துடன் இருப்போம் என்றும் பாபா ராம்தேவ் தரப்பு தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், "நீதிமன்றத்தில் உங்கள் வழக்கறிஞர் ஒன்று சொல்லும் போது அது எனக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. நீங்கள் குற்றமற்றவர் என்றோ அப்பாவி என்றோ சொல்ல முடியாது.. நாங்கள் இன்னும் உங்களை மன்னிக்கவில்லை. இதுபோல நீங்கள் செய்வது முதல்முறை இல்லை" என்று காட்டமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஒத்திவைப்பு: நிச்சயம் இதை மீண்டும் செய்ய மாட்டோம் என்று நீதிபதிகள் உறுதி அளித்தார். அப்போது நீதிபதி, "உங்கள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒன்று சொல்கிறார். அதன் பிறகு 24 மணி நேரத்திற்குள் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். இது கூட தெரியாத அளவுக்கு நீங்கள் அப்பாவி இல்லை" என்றர்.
நீங்கள் செய்த விஷயங்களுக்கு நியாயம் கற்பிக்க வேண்டாம் என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications