Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமலாக்கத் துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த போது வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.

Dushar Mehta on behalf of ED argue in Senthil Balajis habeas corpus case today

இந்த வழக்கின் விசாரணையாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது அவரை அதிகாரிகள் கைது செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்ததை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கில் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி ஆகிய நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து 3ஆவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தன் மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டும். அமலாக்கத் துறை கைது சட்டவிரோதமானது அல்ல என்றும் தீர்ப்பளித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் வாதம் செய்தனர். இந்த வழக்கு கடந்த 27ஆம் தேதி இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அவர் அமலாக்கத் துறை காவல் துறை அதிகாரிகள் அல்ல.

அவர்கள் அப்படி கருதப்பட்டால் போலீஸ் அதிகாரியின் அனைதது அதிகாரங்களுக்கு அவர்களுக்கு இருக்கும். இது பிஎம்எல்ஏ சட்ட விதிகளுக்கு முரணாணது. இதனால் கடும் பிரச்சினைகள் ஏற்படும். குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல் துறையில் ஆஜர்படுத்த மட்டுமே அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை.

அது போல் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணையின் போது கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. பெரா வழக்குகளில் அமலாக்கத் துறை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதில்லை. பிஎம்எல்ஏ சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் காவலை நாடுகிறார்கள். அதுதான் பிரச்சினையாக இருக்கிறது என்றார்.

துஷார் மேத்தா தனது வாதத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அமலாக்கத் துறை இதுவரை 300 பேரை கூட கைது செய்யவல்லை. தவறுதலாக ஒருவரை கைது செய்தால் கூட அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணைக்கு பிறகு கைது செய்ய சட்டப்பிரிவு 19இன் கீழ் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என வாதம் செய்தார்.

Dushar Mehta on behalf of ED argue in Senthil Balajis habeas corpus case today

அன்றைய தினம் தனது தரப்பு வாதத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாததால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மீண்டும் வாதத்தை தொடர கபில் சிபல் அனுமதி கேட்டார். இதையேற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அந்த வகையில் நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முகுல் ரோத்தகி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில் இரு தரப்பு வாதங்களும் நாளைக்குள் (இன்று ஆகஸ்ட் 2) முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை இதே அமர்வில் தலைமை நீதிபதி ஒப்புதலுடன் பட்டியலிட உச்சநீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி தரப்பின் கபில் சிபல், முகுல் ரோத்தகி வாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.

அவர் கூறுகையில் ஒருவர் முழு கட்டுப்பாட்டில் வைப்பதுதான் நீதிமன்றக் காவலே தவிர மருத்துவமனையிலோ அல்லது சிறையிலோ இருப்பதை நீதிமன்றக் காவலில் வைப்பதாக கருத முடியாது. எனவே மருத்துவமனையில் இருந்த காலத்தையும் நீதிமன்றக் காவலில் இருந்ததையும் அமலாக்கத் துறை விசாரணை காலமாக கருதி கழித்துவிட முடியாது. எனவே அமலாக்கத் துறை விசாரணை இந்த வழக்கில் மிகவும் முக்கியம்.

செந்தில் பாலாஜி மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள நாட்களை அமலாக்கத் துறைக்கான விசாரணை காலமாக கருதினால் அவர் சட்டத்தை உடைக்க நாம் அனுமதிக்கிறோம் என்று அர்த்தமாகிறது. ஒருவரை கைது செய்து வைத்துள்ள நிலையில் அவர் காவலில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டு 15 நாட்கள் கழித்து வந்து எனக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் முடிந்து விட்டது, இனி காவலில் எடுக்க கூடாதென சொல்ல முடியுமா. அப்படிதான் செந்தில் பாலாஜி விவகாரமும் இருக்கிறது என பல்வேறு கருத்துகளை கூறி துஷார் மேத்தா தனது வாதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை விசாரிப்பது மிக மிக முக்கியம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனுக்கள் மீது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+