Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது ஜாமீன்.. உச்சநீதிமன்றம் அதிரடி! 15 மாதங்களுக்கு பிறகு சுதந்திர காற்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதன் மூலம் 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார். வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

senthil balaji supreme court enforcement directorate

அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கபட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது.

நிபந்தனைகள்: ரூ.25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக தடையில்லை: ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதால், கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி விரைவில் விடுதலையாகி வெளியே வருகிறார். அமைச்சராக எந்த தடையும் இல்லை என்று செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வர உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செந்தில் பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள்: முன்னதாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் அஜராகினர். செந்தில் பாலாஜி தரப்பு தனது வாதத்தில், வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன்வைக்கிறது.

பிஎம்எல்ஏ சட்ட பிரிவில் ஜாமீன் வழங்கக் கூடாது என்ற விதி இல்லை. அமலாக்கத் துறை தாமதமாகவே ஆவணங்களை கொடுத்தது. செந்தில் பாலாஜி தற்போது எந்த பதவியிலும் வகிக்கிவல்லை. எனவே அமலாக்கத் துறை சொல்வது போல் அவரால் எந்த சாட்சிகளையும் கலைக்கவும் முடியாது, விசாரணையில் தனது செல்வாக்கை பயன்படுத்தவும் முடியாது" உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தது.

நீதிபதி கேள்வி: செந்தில் பாலாஜி தரப்பு இந்த வாதத்தை முன்வைக்கும் போது குறுக்கிட்ட நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்பதால் அவரால் அமலாக்கத் துறை விசாரணையில் குறுக்கிட முடியாது என்கிறீர்கள். அப்படியென்றால் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் தனது செல்வாக்கை பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை ஒன்றுமில்லாமல் ஆக்க முடியுமா? என நீதிபதி ஓகா கேள்வி எழுப்பினார். பரபரப்பான வாதங்கள் இந்த வழக்கில் நடைபெற்ற நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்து இருக்கிறது. 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+