எங்களின் அடுத்த அஜண்டா இதுதான்.. சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட வேற லெவல் திட்டம்!
எங்களின் அடுத்த அஜண்டா (Agenda) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் என்று ராஜ்ய சபாவில் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.
Recommended Video
டெல்லி: எங்களின் அடுத்த அஜண்டா (Agenda) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் என்று ராஜ்ய சபாவில் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.
பல்வேறு பரபரப்பிற்கு மத்தியில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜக தலைவர்கள் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதோடு மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து ராஜ்ய சபாவில் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.

என்ன சொன்னார்
சுப்பிரமணியன் சாமி தனது பேச்சில், இன்று அவையில் நடந்த சரித்திர நிகழ்வை ஏன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றுதான் இந்திய அரசியலமைப்பின் முதல் சட்டப்பிரிவு சொல்கிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை கூட அந்த சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

நாங்கள்
அதை 370 சட்டப்பிரிவை நீக்கி நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். அதை நாம் தடுத்து நிறுத்தி உள்ளோம். இதனால்தான் பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை இதில் கேட்டது. இதை வைத்து எதிரி நாட்டு அரசுகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது.

இல்லை
370 சட்டப்பிரிவை பயன்படுத்திதான் காஷ்மீரில் பண்டிட்கள் கொல்லப்பட்டனர். 5000 க்கும் அதிகமான பண்டிட்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். தற்போது அந்த சட்டத்தையே நாம் நீக்கி உள்ளோம். இனி அங்கு எல்லோருக்கும் சம உரிமை கண்டிப்பாக கிடைக்கும்.

அடுத்து என்ன
எங்களின் அடுத்த அஜண்டா (Agenda) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான். அதை விரைவில் செய்வோம். காஷ்மீரில் இருக்கும் எல்லா ஆக்கிரமிப்பு பகுதிகளையும் மீட்டு இந்தியாவுடன் இணைப்போம் என்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications