முதல்வரான பின் முதல்முறையாக சோனியா, ராகுலை சந்தித்த ஸ்டாலின்.. உடன் சென்ற துர்கா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
டெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஸ்டாலின் மனைவி துர்காவும் உடன் சென்றிருந்தார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அரை மணி நேரம் தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து அவரிடம் கலந்துரையாடினார். 5.30 மணிக்கு அவர்களது சந்திப்பு நிறைவடைந்தது.

இதனையடுத்து கூட்டணி கட்சியினரான கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் எச்சூரி, டி.ராஜாவை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் இன்று காலையில் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். சோனியா காந்திக்கு பொன்னாடையும் புத்தகமும் பரிசாக அளித்தார். ராகுல்காந்திக்கு சிவப்பு நிற பொன்னாடையை போர்த்தி வாழ்த்து கூறினார்.
வழக்கமாக கூட்டணிக் கட்சித்தலைவர்களை சந்திக்க செல்லும் போது நாடாளுமன்ற எம்பிக்கள் உடன் செல்வது வழக்கம். ஆனால் சோனியா காந்தி, ராகுல்காந்தியை ஸ்டாலின் சந்திக்க சென்ற போது அவரது மனைவி துர்காவும் உடன் சென்றார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சித்தலைவராக, திமுக தலைவராக பலமுறை டெல்லி சென்றிருந்தாலும் தமிழ்நாடு முதல்வரான பின்னர் முதன் முறையாக டெல்லி சென்ற மு.க ஸ்டாலினுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications