எங்கெல்லாம் பெட்டிய மாத்தணும்னு பாக்கத்தான் எக்ஸிட் போல் நடத்துனோம்... வைரல் மீம்ஸ்கள்
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதைவைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர். அப்படி வெளியான சில மீம்ஸ்களை இப்போது பார்ப்போம்.
நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாமே திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில் இந்த கணிப்புகள் குறித்து சில மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
மீடியாக்கள் கொரோனா குறித்து இதுவரை காட்டிவந்த செய்திகளை அப்படியே விட்டு விட்டு எக்ஸிட் போல் பக்கம் திரும்பியதை கிண்டல் செய்து ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார்.

தாமரை மலராது
எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் அனைத்தையும் 100% நம்பலாம்.ஏனெனில் பிஜேபி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறும் என்று யாரும் சொல்லவில்லை
தாமரை தமிழ்நாட்டில் எந்தக் காலமும் மலராது என்று ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார்.

தாங்க முடியல
இன்னொருவர் எக்ஸிட் போல் அலப்பறைகள் என்று கூறி மீம்ஸ் போட்டுள்ளார். 23000 பூத்துகளில் 47000 பேரிடம் கருத்து கேட்டு இருக்கிறானுங்க.
அப்போ ஒரு பூத்துக்கு சராசரி 2 பேரிடம் கருத்து கேட்டு இருக்கிறார்கள். இவனுங்க மீடியாவை கையிலே வெச்சிக்கிட்டு செய்யிற அலும்பு இருக்கே...முடியல என்று கூறியுள்ளார்.

ஷாக் மீம்ஸ்
எங்கெல்லாம் பெட்டிய மாத்தணும்னு பாக்கத்தான் எக்ஸிட் போல் நடத்துனோம்.. என்று ஒருவர் கூறுவது போலவும், அதை பார்த்து ஒரு பிரிவினர் ஷாக் ஆவது போலவும் மீம்ஸ் ஒன்று வெளியாகி உள்ளது-

திமுக வெல்லும்
தமிழ்நாட்டின் எக்ஸிட் போல் குறித்த எனது கணிப்பு எப்படி 100% சரியாக இருக்கிறதோ அப்படி மே 2 ஆம் தேதி இதைவிட அதிகமான இடங்களை திமுக அணி கைப்பற்றும் என்ற என் கணிப்பும் மெய்யாகும் என விழுப்புரம் தொகுதி எம்பியும் விசிகவின் மூத்த தலைவருமான எழுத்தாளர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

எக்ஸிட் போல் ரிசல்ட்
விடப்பா, விடப்பா எக்ஸிட் போல்ல பொங்குறதும், ரிசல்ட் வந்தா புஸ் ஆகறதும் சகஜம் தானே என்று திமுகவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டிருக்கிறார் ஒரு ட்விட்டர்வாசி.

கேள்வி எழுப்பினார்
இதனிடையே பழனிகுமார் யாதவ் என்பவர் எக்ஸிட் போலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறுகையில், என்னை பின்தொடரும் 12000 பேரிடம் ஒரு கேள்வி மக்கா..! உங்களில் யாரிடமாவது மீடியா எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு கேட்டாங்களா..??? என்று கேட்டுள்ளார். அவருக்கு பலர் இல்லை என்றே பதில் அளித்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications