தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.. மத்திய அமைச்சரிடம் இருந்து பறந்த பாராட்டு கடிதம்
டெல்லி: மக்கள் குறை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பினை பாராட்டி பிரதமர் அலுவலக மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் நலத்திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு மக்கள் குறை தீர்ப்பிலும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு சேவை மற்றும் நிர்வாகத்தின் அடிப்படை சேவைகளில் மக்கள் குறைகளை எதிர்கொள்ளும் போது உரிய அலுவலர்களை அணுகி குறைகளை தெரிவிக்கும் நாளாக மக்கள் குறை தீர்க்கும் நாளும் வாரம் தோறும் கடை பிடிக்கப்படுகிறது.

கடந்த வாரம் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூட பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டது. அதாவது, ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில், மனுக்களை நேரடியாக பெறும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" திட்டம் 2023-2024-ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்து இருந்தார்.

இவ்வாறாக மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மக்கள் குறை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பினை பாராட்டி பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜிதேந்திர சிங் அனுப்பிய கடிதத்தில், மக்கள் குறையை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications