டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாநிலங்கள் அளவில் மோடிக்கு மக்கள் ஆதரவு எப்படி? பிரமாண்ட டெய்லிஹன்ட் கருத்து கணிப்பில் சுவாரசியம்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெய்லிஹன்ட் சுவாரசிய சர்வே முடிவு

    டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செய்தி மற்றும் உள்ளூர் செய்தி ஆப்பான டெய்லிஹன்ட், ஆன்லைனில் நடத்திய பிரமாண்டமான டிரஸ்ட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. நீல்சன் இந்தியாவுடன் இணைந்து இந்த மாபெரும் கருத்துக் கணிப்பை டெய்லிஹன்ட் நடத்தியிருந்தது.

    இது இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்டிராத, மாபெரும் கருத்துக் கணிப்பு. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

    நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது இந்தக் கருத்துக் கணிப்பு. பெருநகரங்கள் மட்டுமல்லாது, 2ம் நிலை, 3ம் நிலை நகரங்களிலும் உள்ள மக்களும் கூட இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். முதல் முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்களும் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    [நாட்டை வழிநடத்தும் திறமையான தலைவர் மோடியா, ராகுலா? டெய்லிஹன்ட் பிரமாண்ட சர்வே ரிசல்ட்]

    பிராந்தியங்கள் சொல்லும் பாடம்

    - நம்பிக்கை மற்றும் நம்பகம் என்ற இரு பதங்களின் வித்தியாசத்தை வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நாம் உணர முடிந்தது. இந்த பிராந்தியங்களில் நமக்குக் கிடைத்த சுவாரஸ்ய அம்சங்கள்:

    தமிழகம் இப்படித்தான்

    முன்பைவிட மோடியை அதிகம் நம்புகிறோம் என்று ஆந்திராவில் 52 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 59 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். கேரளாவில் 28 சதவீதம் பேரும், தமிழகத்தில் மிக குறைவாக 25 சதவீதம் பேரும் மோடி மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் 52 சதவீதம் பேர் நம்புகிறார்கள். இந்திய ஒட்டுமொத்த சராசரி 48 சதவீதம் ஆகும்.

    இதேபோல 2வது முறையாக மோடி பிரதமரானால் உங்கள் குடும்பத்திற்கு இன்னும் சிறப்பான எதிர்காலத்தை தருவாரா என்ற கேள்வவிக்கு, ஆந்திராவில் 26 சதவீதம் பேர் ஆம் என்றுள்ளநர். கர்நாடகாவில் இது 61 சதவீதமாகவும், கேரளாவில் 27 சதவீதமாகவும் உள்ள நிலையில், தமிழகத்தில் குறைந்த அளவாக 24 சதவீதம் பேர்தான் ஆம் என்று தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் 37 சதவீதம் பேர் ஆம் என்று கூறிய நிலையில், இந்திய சராசரி 50 சதவீதமாக உள்ளது.

    தேர்தல் மாநிலங்களில்

    தேர்தல் மாநிலங்களில்

    தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில்... சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தெலுங்கானாவில் இந்த நிலை மாறிக் காணப்படுகிறது. நீண்ட காலப் பிரச்சினையான ஊழலை ஒழிப்பதில் மோடியே சரியானவர் என்று 60 சதவீதத்திற்கும் மேலானோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    நெருக்கடி நேரங்களில்

    நெருக்கடி நேரங்களில்

    தேசிய அளவிலான நெருக்கடி சமயங்களில் நாட்டுக்குத் தலைமை தாங்குவதில் மோடியே சிறந்தவர் என்று 62 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி (17%), அரவிந்த் கெஜ்ரிவால் (8), அகிலேஷ் யாதவ் (3), மாயாவதி (2) ஆகியோர் அடுத்தடுத்து வருகின்றனர்.

    கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை

    கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை

    - சர்வே குறித்த வடிவத்தை டெய்லிஹன்ட் மற்றும் நீல்சன் இந்தியா இணைந்து வடிவமைத்தன. அதன் பின்னர் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளில் உள்ள டெய்லிஹன்ட்டின் பல்வேறு இணையதளங்ககளில் இது இடம் பெற்றது.
    - இதன் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை டெய்லிஹன்ட், நீல்சன் நிறுவனத்திற்கு நீல்சன் ஏபிஐ மூலமாக அனுப்பி வைத்தது.

    - நீல்சன் இந்தியா நிறுவனத்தின் குழுவினர் இந்த தரவுகளை சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட நியமம் மற்றும் விதிகளுக்குட்பட்டு முழுமையாக பரிசீலித்தனர்.

    - 18 முதல் 24 வரை, 25 முதல் 34 வரை, 35 வயதுக்கு மேற்பட்டோர் என வயது வாரியாக பிரித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

    - 10 கேள்விகள் கேட்டு அதற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் டிரஸ்ட் ஆப் தி நேஷன் சர்வே கேட்டுக் கொண்டது.

    English summary
    62% respondents confident that Narendra Modi best fit to lead nation followed by Rahul Gandhi (17%), Arvind Kejriwal (8%), Akhilesh Yadav (3%) and Mayawati (2%) respectively in Dailyhunt Trust Of The Nation survey. But Tamilnadu believes Modi lesser than other states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X