• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டெய்லிஹன்ட் "டிரஸ்ட் ஆப் தி நேஷன்" சர்வே முடிவு

|
  டெய்லிஹன்ட் சுவாரசிய சர்வே முடிவு

  டெல்லி: இந்தியாவின் நம்பர் 1 செய்தி மற்றும் உள்ளூர் செய்தி ஆப்பான டெய்லிஹன்ட் தான் நடத்திய பிரமாண்டமான டிரஸ்ட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. நீல்சன் இந்தியாவுடன் இணைந்து இந்த மாபெரும் கருத்துக் கணிப்பை டெய்லிஹன்ட் நடத்தியது.

  இது இந்தியாவில் இதுவரை நடத்தப்பட்டிராத, மாபெரும் கருத்துக் கணிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

  நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது இந்தக் கருத்துக் கணிப்பு. பெருநகரங்கள் மட்டுமல்லாது, 2ம் நிலை, 3ம் நிலை நகரங்களிலும் உள்ள மக்களும் கூட இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். முதல் முறையாக வாக்களிக்கப் போகும் புதிய வாக்காளர்களும் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டுள்ளனர்.

  இந்தியாவிலேயே மோடியை கம்மியா நம்புறது தமிழகமும், கேரளாவும்தான்.. டெய்லிஹன்ட் சுவாரசிய சர்வே முடிவு]

  கருத்து கணிப்பு முறை

  கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை:

  - சர்வே குறித்த வடிவத்தை டெய்லிஹன்ட் மற்றும் நீல்சன் இந்தியா இணைந்து வடிவமைத்தன. அதன் பின்னர் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளில் உள்ள டெய்லிஹன்ட்டின் பல்வேறு இணையதளங்ககளில் இது இடம் பெற்றது.
  - இதன் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை டெய்லிஹன்ட், நீல்சன் நிறுவனத்திற்கு நீல்சன் ஏபிஐ மூலமாக அனுப்பி வைத்தது.

  - நீல்சன் இந்தியா நிறுவனத்தின் குழுவினர் இந்த தரவுகளை சர்வதேச அளவில் ஒத்துக்கொள்ளப்பட்ட நியமம் மற்றும் விதிகளுக்குட்பட்டு முழுமையாக பரிசீலித்தனர்.

  - 18 முதல் 24 வரை, 25 முதல் 34 வரை, 35 வயதுக்கு மேற்பட்டோர் என வயது வாரியாக பிரித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

  - 10 கேள்விகள் கேட்டு அதற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் டிரஸ்ட் ஆப் தி நேஷன் சர்வே கேட்டுக் கொண்டது.

  முக்கிய விஷயங்கள்

  முக்கிய விஷயங்கள்


  முக்கிய அம்சங்கள் - டெய்லிஹன்ட் டிரஸ்ட் ஆப் தி நேஷன் சர்வே:

  - 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 63 சதவீத பங்கேற்பாளர்கள் பிரதமர் நரேந்திர மோடி மீது கூடுதலான அல்லது அதே அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது தலைமைத்துவம் திருப்தி அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  - நரேந்திர மோடி 2வது முறையாக ஆட்சிக்கு வந்தால் சிறந்த எதிர்காலத்தை அளிப்பார் என்று 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

  - மொபைல் போன் மூலமாக சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் சாதாரண மற்றும் நடுத்தர ரக போன்களை பயன்படுத்துவோர் ஆவர். இவர்களின் ஆதரவு மோடிக்கே கிடைத்துள்ளது. உயர் ரக போன்களை பயன்படுத்துவோர் மத்தியில்தான் மோடி பிரபலம் என்ற கருத்தை இது உடைப்பதாக உள்ளது.

  கெஜ்ரிவாலுக்கு அதிக வாக்கு

  கெஜ்ரிவாலுக்கு அதிக வாக்கு

  நீண்ட காலப் பிரச்சினையான ஊழலை ஒழிப்பதில் மோடியே சரியானவர் என்று 60 சதவீதத்திற்கும் மேலானோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

  நெருக்கடி நேரம்

  நெருக்கடி நேரம்

  தேசிய அளவிலான நெருக்கடி சமயங்களில் நாட்டுக்குத் தலைமை தாங்குவதில் மோடியே சிறந்தவர் என்று 62 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி (17%), அரவிந்த் கெஜ்ரிவால் (8), அகிலேஷ் யாதவ் (3), மாயாவதி (2) ஆகியோர் அடுத்தடுத்து வருகின்றனர்.

  வாக்காளர் மனநிலை

  வாக்காளர் மனநிலை

  இந்த மாபெரும் சர்வே குறித்த முக்கிய அம்சங்களை டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி விளக்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உண்மையான இந்தியாவின் அத்தனை வாக்காளர்களின் மன நிலையையும் அறிய இதை ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்த்தோம். அதற்குப் பொருத்தமான கருத்துக்கணிப்பாக டிரஸ்ட் ஆப் தி நேஷன் சர்வே அமைந்தது.

  விரிவான கருத்துக் கணிப்பு

  விரிவான கருத்துக் கணிப்பு

  நாட்டு மக்களின் மன நிலையை மிக விரிவாக அதாவது, நிலப்பரப்பு, மாநிலம், மொழி என பல்வேறு வித்தியாசமான சூழல்களின் பின்னணியில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் நினைத்ததை விட விரிவாகவே அறிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு இந்திய மொழிகளில் செய்திகளை வழங்கும் டெய்லிஹன்ட் தளத்தில் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது மிகப் பொருத்தமானதாகவும் அமைந்தது. நீல்சன் இந்தியா நிறுவனம் தனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதற்காக அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

  நம்பகத்தன்மை வாய்ந்த சர்வே

  நம்பகத்தன்மை வாய்ந்த சர்வே

  நீல்சன் -தெற்கு ஆசியாவுக்கான தலைவர் பிரசுன் பாசு கூறுகையில், நீல்சன் ஒரு சர்வதேச அளவிலான அமைப்பாகும். உலகம் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வேக்களை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த சர்வேயில் இடம் பெற்றதை மகிழ்ச்சியாக கருதுகிறோம். உலகத் தரத்திலான நியமங்கள், விதிமுறைகளை இதில் பயன்படுத்தி தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை வகுத்துள்ளோம் என்றார்.

  புதுடெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  • Brajesh Goel
   Brajesh Goel
   அவாமி ஆம்ஜான் கட்சி
  • Ajay Maken
   Ajay Maken
   இந்திய தேசிய காங்கிரஸ்

   
   
   
  English summary
  62% respondents confident that Narendra Modi best fit to lead nation followed by Rahul Gandhi (17%), Arvind Kejriwal (8%), Akhilesh Yadav (3%) and Mayawati (2%) respectively in Dailyhunt Trust Of The Nation survey.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more