என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறார். அதற்கான முதற்கட்டமாக இது நம்ம இயக்கம் என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்த அண்ணாமலை, டெல்லி சென்று தேசிய பாஜக தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், அண்ணாமலை அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே தமிழக அரசியலில் விஜய் புதிதாக கால் பதித்து ஆட்சியை பிடித்துவிட்ட சூழலில், திமுக, அதிமுக மற்றும் நாதக ஆகிய 3 கட்சிகளும் ஆச்சரியத்தில் இருக்கின்றன. இப்படியான சூழலில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். இதனை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கின்றன.

ஒரு படத்தில் இறந்தவரின் உடலை பேருந்தில் வைத்தே கொண்டு செல்லும் வடிவேலுவை பார்த்து தாடி பாலாஜி, கில்லி அண்ணே.. நீங்க.. என்பார். அதில் வரும் வடிவேலுவாக அமித்ஷாவையும், இறந்த போன அல்வா சீனுவாக ரஜினியையும் மாற்றி, "இனி பாஜக வரவே வராதுனு தெரிஞ்சு.. அண்ணாமலையை தனிக்கட்சி ஆரம்பிக்க சொன்னது இல்லாம.. ரஜினியை கூட வச்சுக்கோனு அனுப்பி வச்சிங்க பாரு.. கில்லிணே நீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

கிங் படத்தில் விக்ரமை பார்த்து வடிவேலு தனது உதவியாளரான சார்லஸிடம், இவன் வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றான்டா என்பார். அதில் வரும் வடிவேலுவாக சீமானையும், சார்லஸாக சாட்டை துரைமுருகனையும் மாற்றி, "4 சதவிகித வாக்கு வங்கியை 2 சதவிகிதமா மாத்த இன்னொருத்தன் வந்துட்டான்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.












Click it and Unblock the Notifications