பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் மீது தாக்குதல்.. பதிலடி என ஈரான் புரட்சிகர காவல்படை அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் ரேடார் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் தொலைத்தொடர்பு கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி போர் தொடுத்தது. அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. இந்தப் போர் நீடித்து வந்தது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது.

Iran Targets US Military Installation in Bahrain in Retaliatory Strike

சுமார் 4 மாதங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால், இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஈரானின் கெஷ்ம் தீவு உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் சிரிக் நகரில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ரேடாரை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தனது வான்வழி போரையும், எண்ணெய் கடத்தலையும் நிறுத்த வேண்டும் என்பதற்கான கடுமையான எச்சரிக்கை இது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செயல்களில் அமெரிக்கா மீண்டும் ஈடுபட்டால், வரம்பின்றி பதிலடி கொடுக்க ஈரான் புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் படை முழு தயார் நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேசமயம், ஈரான் ஒரு ரேடார் அமைப்பைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என சென்ட்காம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனுக்கு மேலே 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சமீப சில வாரங்களாக அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், தெஹ்ரான் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதைப் பெரும்பாலும் தவிர்த்து, நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை சீர்குலைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+