ஓம் ட்ரைலரில் கிளம்பிய விவாதம்.. மம்முட்டி பெயரை வைத்து பஞ்சாயத்து! இத்தனை விஷயம் இருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு படத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள் என்றால், அவர்களுடைய காட்சிகளை பார்ப்பதற்கு முன்பே டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் வருகிறது, யாருடைய பெயர் எப்படி போடப்பட்டிருக்கிறது என்பதையும் ரசிகர்கள் கவனிப்பார்கள். அதிலும் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி என பெரிய நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் 'ஓம்' படத்தில் இப்போது இதுதான் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'ஓம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை பெற்றிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள், செம்மரக் கடத்தல் பின்னணி, தனுஷ் - மம்முட்டி மோதல் என ட்ரெய்லரில் பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ரசிகர்கள் தனியாக கவனித்திருக்கிறார்கள். அது படத்தின் ட்ரெய்லரில் நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் வரிசைதான்.

Dhanush O M trailer Mammootty

பொதுவாக தனுஷ், மம்முட்டி என இரு பெரிய நடிகர்கள் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஓம் ட்ரெய்லரில் முதலில் தனுஷின் பெயர் வருகிறது. அதற்கு பிறகு ட்ரெய்லரின் ஒரு பகுதி கடந்த பின்னர்தான் மம்முட்டியின் பெயர் வருகிறது. அதைத் தொடர்ந்து சாய் பல்லவியின் பெயரும் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், மம்முட்டி போன்ற ஒரு பெரிய நடிகர் நடித்திருந்தும் தனுஷின் பெயருக்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Dhanush O M trailer Mammootty

தனுஷுக்கு முன்னுரிமை

ஓம் படத்தில் தனுஷ் கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும்போதே தெரிகிறது. அவரைச் சுற்றித்தான் கதையின் முக்கியமான சம்பவங்கள் நகர்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் முதல் பெயராக தனுஷின் பெயர் இடம்பெற்றிருப்பதை படத்தின் கதாநாயகன் என்ற அடிப்படையில் பார்க்கலாம்.

ஆனால் மம்முட்டியும் சாதாரணமாக ஒரு காட்சியில் வந்து போகும் நடிகர் கிடையாது. அவருடைய கதாபாத்திரமும் படத்தின் கதையில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதாக ட்ரெய்லர் காட்டுகிறது. குறிப்பாக தனுஷுக்கும் மம்முட்டிக்கும் இடையே நடக்கும் மோதல் படத்தின் முக்கியமான எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது மம்முட்டியின் பெயர் தனுஷ் பெயருக்கு பக்கத்திலேயே வராமல், ட்ரெய்லரின் பாதி கடந்த பிறகு வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Dhanush O M trailer Mammootty

இது மம்முட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரம் கிடையாது. அதேபோல் பெயர்களின் வரிசையை வைத்து இரண்டு நடிகர்களுக்கும் இடையே ஏதாவது பிரச்சினை என்று சொல்லவும் முடியாது. ஆனால் திரையில் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் மோதும் இந்த படத்தில், ட்ரெய்லரின் பெயர் வரிசை மட்டும் தனியாக பேசப்படுவது சுவாரசியமாகவும் இருக்கிறது.

விஜய் - மோகன்லால் படத்துடன் ஒப்பிடு

இந்த விவாதத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இதற்கு முன்பு விஜய்யுடன் மோகன்லால் ஜில்லா படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருடைய பெயர்களும் அருகருகே இடம்பெற்றிருந்ததை ரசிகர்கள் நினைவுபடுத்துகிறார்கள். அதனால் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இருக்கும்போது அவர்களுடைய பெயர்களை எப்படி அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதையும் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Dhanush O M trailer Mammootty

அப்போது இருவருடைய நட்சத்திர அந்தஸ்துக்கும் ஏற்ற வகையில் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகப் பேசுகிறார்கள். ஆனால் ஓம் படத்தில் தனுஷின் பெயருக்கு முதலில் இடம் கொடுக்கப்பட்டிருப்பதால், இந்தப் படம் தனுஷை மையமாக வைத்தே விளம்பரப்படுத்தப்படுகிறது என்ற கருத்தும் எழுந்திருக்கிறது. இங்கே ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். படத்தின் ட்ரெய்லரில் பெயர்கள் வரும் வரிசை என்பது தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர வடிவமைப்பு மற்றும் படத்தின் கதாநாயகன் யார் என்பதன் அடிப்படையில் அமையலாம். அதனால் மம்முட்டியின் பெயர் பின்னால் வந்துவிட்டது என்பதற்காக அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் குறைவு என்று முடிவு செய்துவிட முடியாது.

Dhanush O M trailer Mammootty

ஓம் ட்ரைலர் எப்படி இருக்கு

பெயர் வரிசை விவாதம் ஒருபக்கம் இருந்தாலும், ஓம் ட்ரெய்லர் படத்தின் கதையை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் போலீஸ் நடவடிக்கை, ரகசிய ஆபரேஷன், கடத்தல் கும்பல் என பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தனுஷ், மம்முட்டி இருவரும் எதிரெதிர் துருவங்களாக மோதும் காட்சிகள் ட்ரெய்லரின் முக்கியமான அம்சமாக இருக்கின்றன.

ராஜ்குமார் பெரியசாமியின் படம்

சாய் பல்லவி மாஸான போலீசாக வருகிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கும் கதையில் முக்கியமான பங்கு இருப்பது தெரிகிறது. வேகமான எடிட்டிங், அதிரடியான சண்டைக் காட்சிகள், சாய் அபியங்கரின் பின்னணி இசை என ட்ரெய்லர் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்கான தோற்றத்தைக் கொடுக்கிறது. அமரன் படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவான கற்பனை கதையாக இதை இயக்குநர் உருவாக்கியிருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தார். எனவே ட்ரெய்லரில் காட்டப்பட்டிருக்கும் சம்பவங்களுக்குப் பின்னால் என்ன கதை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தனுஷ் பெயர் முதலில் வந்தது, மம்முட்டி பெயர் தாமதமாக வந்தது என்று இப்போது சமூக வலைதளங்களில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் படம் வெளியான பிறகு யாருடைய கதாபாத்திரம் அதிகம் பேசப்படும், தனுஷ் - மம்முட்டி கூட்டணி ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பதுதான் உண்மையான போட்டியாக இருக்கும். மொத்தத்தில், ட்ரெய்லர் வெளியானதும் கதை, ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் நடிகர்களின் பெயர் இடம்பெற்றிருக்கும் வரிசையும் விவாதமாக மாறியிருப்பது ஓம் படத்துக்கு கிடைத்திருக்கும் கவனத்தைக் காட்டுகிறது. நவம்பர் 20ஆம் தேதி படம் திரைக்கு வரும்போது இந்த 3 நடிகர்களில் யாருடைய நடிப்பு ரசிகர்களிடம் அதிகம் பேசப்படும் என்பதுதான் அடுத்த கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+