கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலம் கட்டிய வருடத்தில் இருந்தே முழுவதுமாக முடிக்காமல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. மழை வரும்போது அருவியாக இந்த மேம்பாலம் மாறுவது வாடிக்கையாகிவிட்டது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் சுமார் 1.85 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிப் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்.எம்.டபிள்யூ (LMW) சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மற்றும் வண்ணான்கோவில் சந்திப்பு ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளை இது கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் அனுமதியோடு, சுமார் ₹115 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் 2020 நவம்பரில் தொடங்கி, டிசம்பர் 2023-ல் முடிவடைந்து, 2024 மார்ச் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலம் திறக்கப்பட்டதிலிருந்தே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியும், சர்ச்சைகளும் நீடித்து வருகிறது. ஏனெனில் ஆபத்தான 90-டிகிரி திருப்பம் முக்கியமான காரணம் ஆகும். பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், பாலத்தின் இறங்கு தளத்தில் ( இணையும் இடத்தில் திடீரென 90-டிகிரியில் வளைந்து திரும்ப வேண்டிய ஆபத்தான சூழல் இருந்தது. இதையடுத்து ஆபத்தான திருப்பப் பகுதியை நீக்கி, சர்வீஸ் ரோடு சீராகப் பாலத்துடன் இணையும் வகையில் 400 மீட்டர் தூரத்திற்குப் புதிய சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பாலத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால், லேசான மழை பெய்தாலே பாலத்தின் மீது குளம் போல் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது. அப்படித்தான் நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பலத்த மழை பெய்ததால் மேம்பாலத்திலேயே மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நின்றது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடிய அமைக்கப்பட்ட பைப் உடைத்து அதில் இருந்து வெளியேறும் மழைநீர் மோட்டர் பம்பில் இருந்து வரும் நீர் போல குபுகுபு என கொட்டுகிறது. மேலும் பாலத்தில் இடுக்கில் இருந்து நீர் அருவிபோல கொட்டி வருகிறது.
மேம்பாலத்தின் அடியே வரும் வாகனங்கள் இந்த அருவியில் குளித்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக பேருந்துகள் முழுவதுமாக மேம்பால அருவியில் நனைந்தப்படி வருகிறது. யாரை குறைகூறுவது என்று மக்களுக்கு தெரியவில்லை. இந்த மேம்பாலத்திற்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும் என்று மக்கள், வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனர்.
-
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!














Click it and Unblock the Notifications