ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது. தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழக வெற்றிக் கழகம் நோக்கி பல கட்சி நிர்வாகிகளும் இளம் தலைவர்களும் செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகமில் மிகவும் துடிப்பான, மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கொண்ட இளம் தலைவர் ஒருவர், தவெக உயர்மட்டத் தலைமையுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இளம் தலைவர் தனது பேச்சுக்கள் காரணமாக பிரபலம் அடைந்தவர்.

DMK

திமுகவில் ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது?

கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் தீவிரமாக உழைத்து, கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஊடக விவாதங்களில் முன்னிலையில் இருந்த இந்த இளம் தலைவருக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அவர் ஒரு குறிப்பிட்ட தொகுதியை குறிவைத்து ஓராண்டுக்கும் மேலாக அடிமட்டப் பணிகளையும் மேற்கொண்டிருந்தார்.

ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியானபோது அவரது பெயர் இடம்பெறவில்லை. கட்சித் தலைமை அவரை முழுமையாக புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. முதலில் வாரிசு அரசியல் காரணமாக சீட் மறுக்கப்பட்டதாக நம்பப்பட்டாலும், உண்மையான காரணம் வேறு என்று இப்போது தகவல்கள் வெளியாகின்றன.

திமுக உயர்மட்டத்துக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, இந்த இளம் தலைவர் மீது ஒரு பெண் நிர்வாகி தரப்பில் தீவிரமான பாலியல் புகார் எழுப்பப்பட்டது. கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தலைமை இந்த விவகாரத்தை ரகசியமாக விசாரித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு இந்த விவகாரம் வெளியானால் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஆயுதமாக மாறும் என்பதால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெக நோக்கி நகரும் இளம் தலைவர்

திமுகவில் தனக்கு ஏற்பட்ட அரசியல் முடக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத இந்த இளம் தலைவர், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவின் அசுர வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்தார். தவெக ஆட்சிக்கு வந்துள்ளதை பார்த்த அவர், தனது அரசியல் எதிர்காலத்துக்கு தவெக சரியான தளம் என முடிவு செய்துள்ளார்.

தற்போது தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மூலம் கட்சியின் உயர்மட்டத் தலைமையை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். திமுகவில் செய்த களப்பணி, சமூக ஊடக செல்வாக்கு மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் தனது ஆளுமையை வலியுறுத்தி முக்கிய பொறுப்பு கோரி வருவதாகத் தெரிகிறது.

தவெக தலைமைக்கு தர்மசங்கடம்

தவெக தமிழகம் முழுவதும் தனது அமைப்பை வலுப்படுத்த இளம் திறமையாளர்களை ஈர்க்கும் திட்டத்தில் உள்ளது உண்மை. எனினும், இந்த இளம் தலைவர் மீதான பாலியல் புகார் பின்னணி தவெக தலைமைக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக சேர்ப்பதில் தயக்கம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

"தூய்மையான அரசியல், பெண்களுக்கு பாதுகாப்பு" என்ற முழக்கத்துடன் களமிறங்கிய தவெக , இத்தகைய சர்ச்சைக்குரிய நபரைச் சேர்த்தால் தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளாகலாம் என மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், இந்த புகார்கள் அரசியல் எதிரிகளால் ஜோடிக்கப்பட்டவை என அந்த இளம் தலைவர் தவெக தரப்பில் விளக்கம் அளித்து வருகிறார்.

திமுகவில் ஓரங்கட்டப்பட்ட இந்த இளம் தலைவர், தவெகவில் இணைந்து இரண்டாவது அரசியல் இன்னிங்ஸைத் தொடங்குவாரா? அல்லது பாலியல் விவகாரம் அவரது தவெக நுழைவுக்கு தடையாக அமையுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+