"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி
சென்னை: தமிழ்நாட்டில் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்- பாமக தலைவர் அன்புமணி இடையே சுவாரசிய உரையாடல் நடந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதே பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக பாமக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்ட நிலையில், அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்- அன்புமணி இடையே சுவாரசிய உரையாடல் நடந்தது.

வேல்முருகன்
இந்தக் கூட்டத்தில் பேசிய வேல்முருகன், "சமூக நீதி கோட்பாடு இளைஞர்களிடையே இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை. இதைக் குறித்த ஒரு புரிதலும் இன்றைய நம்முடைய இளைய தலைமுறைக்கு, பெரும்பான்மையினருக்கு இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தி. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இங்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து, புதிதாகப் பொறுப்பேற்று இருக்கிற அரசின் பிரதிநிதியையும் அழைத்து, முக்கியமான கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
69% இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதில் எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் தலையிடும் அல்லது அதைத் தடுத்து நிறுத்தும் என்பதில் தொடங்கி, அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கல்வி, வேலைவாய்ப்பு என்கிற அந்தச் சமூக நீதி உரிமை, சம உரிமை கிடைக்கப் பெற வேண்டும் என்கிற இந்த நோக்கத்தை நாம் நிறைவு செய்ய வேண்டும். இதற்கு என்னுடைய ஒரு வேண்டுகோள் ஒன்று தான்.. இனி வரும் தேர்தலில் நாம் யாரோடு கூட்டணி வைத்தாலும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய சமூக நீதி, சம நீதி என்பதே முதல் கண்டிஷனாக இருக்க வேண்டும்" என்றார்.
குறுக்கிட்ட அன்புமணி
அப்போது குறுக்கிட்ட அன்புமணி, "அவ்வளவு தூரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடலாம்" என்றார்.
தொடர்ந்து பேசிய வேல்முருகன், "ரொம்ப மகிழ்ச்சி. அன்புமணி முதல்வரோடு விரிவாக இதைப் பேசி இருக்கிறார். ராமதாஸ் போலவே அன்புமணியும் செயல்படுகிறார். புலிக்குப் பிறந்தது நிச்சயமாக அது பூனையாக மாறாது, பாயும் புலியாக மாறியிருக்கிறது. இங்கு மட்டுமின்றி சர்வதேச மாநாடுகளிலும் அவர் உரையாற்றுகின்ற போதும் மிகச் சிறப்பாகத் தனது பாயிண்டுகளை எடுத்து வைப்பார். ஏற்கனவே நடந்த இரு கூட்டங்களில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், இந்த கூட்டத்தில் கண்டிப்பாக நாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என அழைத்தார்..
தாய் வீடு
சரி சமூக நீதிக்காக அழைக்கிறார்கள். நம்ம வளர்ந்த இடம், தாய் வீடு என்று நான் முதன்முறையாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு என் தாய் வீட்டின் அழைப்பை ஏற்று, அதுவும் குறிப்பாக அன்புமணியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன். இங்கு அனைத்துத் தலைவர்களும் வந்துள்ளனர். பிராந்தியக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என அனைவரும் இருக்கிறார்கள்.
இந்தத் தலைவர்களை மீறி இந்த மண்ணில் ஆட்சியும் யாரும் நிறுவ முடியாது, சமூகக் கலவரங்களிலும் யாரும் ஈடுபட்டு விட முடியாது. அதனால் இது ஒரு தமிழ் சமூகத்தின் வாழ்வுரிமைக்கான, சாதி மோதல்கள் இல்லாத, சாதிச் சண்டைகள் இல்லாத, மதக் கலவரங்கள் இல்லாத ஒரு தமிழ் சமூகம் உருவாக வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
கடந்த 5 ஆண்டுகளில் நான் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த கோரிக்கை விடுத்தேன். மற்ற மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவர்கள் கேட்கவே இல்லை. கூட்டணியில் இருந்து விலக முக்கிய காரணம் அதுதான். இதைக் குறைந்தபட்சம் ஒரு அறிவிப்பாவது வெளியிடுங்கன்னு என்றேன். ஆனால், செய்யவில்லை. இதனால் தான் வெளியே வந்தேன் இன்றைக்கு உங்களோடு சேர்ந்திருக்கிறேன்" என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications