ஸ்ட்ராங்கா கரூரில் சொன்ன விஜய்.. அதுக்குள்ளேயே செங்கோட்டையில் சர்வேயர் வேலையை காட்டிட்டாரு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், லஞ்ச ஊழலுக்கு எதிராக தனது தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுத்தார். "உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா, கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க, நான் இருக்கேன் உங்களோட" என்று மேடையில் அவர் கர்ஜித்தார்.. ஆனால், அதற்குள் இன்று ஒருவர் செங்கோட்டையில் லஞ்சம் வாங்கி பிடிபட்டுள்ளார். இது அரசு அலுவலகங்களில் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. செங்கோட்டையில் என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ளது பிரானூர் என்ற பகுதி.. இங்கு 52 வயதான மாடசாமி என்பவர், தனது மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் 2.28 சென்ட் நிலத்தையும் அதனுடன் இணைந்த ஒரு வீட்டையும் ஆசையாக வாங்கியிருக்கிறார்.

CM Vijay Karur Speech

செங்கோட்டை சர்வேயர்

ஆனால், அந்த சொத்து கூட்டு பட்டாவில் இருந்துள்ளது. எனவே பிற்காலத்தில் எந்தவிதமான சட்ட சிக்கல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதனைத் தனிப்பட்டாவாக மாற்ற அவர் திட்டமிட்டார். இதற்காக செங்கோட்டை வட்டார நில அளவை அலுவலகத்தை நாடி, அங்கு பணிபுரிந்து வந்த 37 வயதான சர்வேயர் ராமர்செல்வத்திடம் அணுகி இதை பற்றி சொல்லி உள்ளார்.

நிலத்தை முறைப்படி அளவீடு

தனது சொந்த நிலத்தை முறைப்படி அளவீடு செய்து, சட்டப்பூர்வமாகத் தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றும் மாடசாமி கேட்டுக் கொண்டார்.. ஆனால் சர்வேயரோ, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கும் என்று கேஷூவலாக சொல்லி உள்ளார்.. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி லஞ்சமாக கொடுப்பதா? என்று வேதனையும் அதிருப்தியுமடைந்தார் மாடசாமி.. சர்வேயருக்கு லஞ்சம் தர விரும்பாமல், நேராக நெல்லை மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இதை பற்றி புகார் அளித்தார்.

இதையடுத்து சர்வேயரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின், ரசாயனம் தடவப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சர்வேயர் ராமர்செல்வத்திடம் தரச்சொல்லி மாடசாமியிடம் தந்தார்கள்.. மாடசாமியும், அதை சர்வேயரிடம் தந்தார்.. அப்போது சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சர்வேயர் ராமர்செல்வத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். திடீரென அதிகாரிகள் சுற்றி வளைக்கவும் சர்வேயர் நிலைகுலைந்து போனார்.

உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.. இந்த லஞ்ச சம்பவம் செங்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசுத் துறை வட்டாரங்களில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

கரூரில் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்

அதுமட்டுமல்ல, இன்று காலையில்தான் விஜய் கரூரில் பேசும்போது லஞ்சம் யாருக்கும் தராதீங்க என்றார்.. "உங்ககிட்ட யாராவது லஞ்சம் ஏதாவது கேட்டாங்கன்னா, "கொடுக்க முடியாது"ன்னு சொல்லுங்க, நான் இருக்கேன் உங்களோட. அப்படியே யாராவது ஃபோர்ஸ் பண்ணாங்கன்னா, "இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்க விஜியோட ஆட்சி"ன்னு ஸ்ட்ராங்கா சொல்லுங்க!மக்களே,

நீங்க கூட இருக்கும்போது லஞ்ச ஊழல் மட்டும் இல்ல, அதிகாரத்தை வச்சு ஆட்டம் போடுற யாரா இருந்தாலும் அடங்கிருவாங்க" என்றார்.. ஆனால், முதலமைச்சர் பேசி முடிக்கிறதுக்குள்ளேயே இப்படியொரு ஒரு லஞ்ச புகார் செங்கோட்டையிலிருந்து வெடித்து கிளம்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+