காதல் கணவரை விவாகரத்து செய்ய போகிறாரா சீரியல் நடிகை ரேஷ்மா? ரசிகர்கள் கவனித்த ஒரு விஷயம்! அடுத்த பஞ்சாயத்து
சென்னை: சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடிகளில் ஒன்றாக இருந்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன்பாண்டியன் பற்றிய செய்திதான் ஸ்பெஷல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இருவரும் சீரியலில் ஒன்றாக நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு பல இடங்களில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தனர். ஆனால் இப்போது இவர்கள் செய்த செயல் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன்பாண்டி இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்த சமயத்தில் இருவரும் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ரேஷ்மா ஆரம்பத்தில் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அப்போது மதன் பாண்டியன் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
காதல் திருமணம்
அதற்குப் பிறகுதான் பூவே பூச்சூடவா சீரியலில் ஹீரோவிற்கு தம்பியாக மதன் நடித்திருந்தார். இவரும் அந்த சீரியலில் ஹீரோ தான். அப்போது ஹீரோ தினேஷ் மனைவியாக தான் ரேஷ்மா அந்த சீரியலில் நடித்திருந்தார். இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலுக்கு பிறகு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டெய்லர் சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியல் முடிவடைந்ததும் விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் நடித்திருந்தார்.

சன் டிவி சீரியல் நடிகை
அந்த சீரியலும் முடிவுக்கு வந்ததும் அதற்கு பிறகு சன் டிவியில் வினோதினி சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல அபி டெய்லர் சீரியலிலும் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் ஒரே ஜோடியாக நடித்திருந்தார்கள். தங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை வீடியோவாக சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரேஷ்மா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதனுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார்.
ஆனால் மதன் இன்னும் ரேஷ்மாவின் புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய திருமண புகைப்படங்கள் தான் ரேஷ்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வரை எல்லாவற்றையும் வைத்திருக்கிறார். ஆனால் ரேஷ்மாவின் பக்கத்தில் மட்டும்தான் அனைத்து புகைப்படங்களும் காணாமல் போயிருக்கிறது. இதுதான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுகிறது.

விவாகரத்து சர்ச்சை
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் பரவி வந்தது ஆனால் இதுகுறித்து ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால் இது வதந்தியாக இருக்கும் இதற்கு முன்பும் பல காதல் ஜோடிகள் பற்றி இதுபோல தானே வதந்திகள் பரவி வந்தது அதுபோல இதுவும் இருக்கும் என்று பலர் கூறி வந்தனர் ஆனால் ரேஷ்மா தனது சோசியல் மீடியா பக்கத்திலேயே மதன் புகைப்படங்களை டெலிட் செய்த பிறகு தான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.













Click it and Unblock the Notifications