ஒரு பைசா கூட லஞ்சம் இல்லை.. பெருமையாக பேசிய விஜய்.. ஒரே வார்த்தையில் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய விஷயம் தான் சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக கவர்ன்மென்ட் ஆபீஸ்களில் லஞ்சம் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையில் மாற்றம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்திருப்பதும் கவனத்தை ஈர்த்து உள்ளது.
கரூர் கூட்டத்தில் பேசிய விஜய், தனது ஆட்சியில் அரசு அலுவலகங்களில் செயல்பாடுகள் முன்பு இருந்ததைவிட இப்ப ரொம்பவே மாறிப்போயிடுச்ச என்று பேசியிருந்தார். இப்போது எல்லாம் அரசு அலுவலகங்களில் யாரும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்குவதில்லை. அந்த ஊழல் இல்லாமல் எல்லா வேலைகளும் நடக்கிறது என்று கூறினார்.

முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி
மேலும், சமீபத்தில் ஒரு முதியவர் என்னிடம் அரசு அலுவலகத்துக்கு போனால் யாரும் இப்போ பணம் கேட்கிறதே இல்ல. அதைவிட பெரிய விஷயம் என்னென்ன உட்கார வைத்து என்ன விஷயம் என்று கேட்கிறார்கள். இதற்கு முன்பெல்லாம் அங்க போ இங்க போ என்று அழைக்களிப்பார்கள். ஆனால் இப்போ எல்லாமே மாறி போயிருக்கிறது. போன வேலையும் உடனுக்குடன் நடக்கிறது. இதை பார்க்க எனக்கு சந்தோஷமாக இருக்கிறது இதுதான் மாற்றம் என்று அவர் சொன்னதை கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று கெத்தாக விஜய் பேசி இருந்தார்.
மேலும் தன்னுடைய ஆட்சியில் பல வருஷங்களாக நிலுவையில் இருக்கிற மக்களின் கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் சந்தோஷமாக கூறியிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரே வார்த்தைகள் கலாய்த்து இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
அதாவது "இது சங்கர் படம் காட்சி" என்று சொல்லி இருக்கிறார். இந்த பதிவு சில நிமிடங்களிலேயே சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு சிலர் விஜய்க்கு ஆதரவாக ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் அப்படி எல்லாம் எந்த மாற்றமும் நடக்கவில்லை இப்ப கூட எத்தனையோ பேரு லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அது குறித்த வீடியோக்கள் கூட சோஷியல் மீடியாவில் வருகிறார் என்று கூறி வருகிறார்கள்.
ஸ்டாலின் பற்றி விஜய் பேச்சு
ஏற்கனவே கொளத்தூரில் தான் பேசியது குறித்து விஜய் பேசியதையும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதாவது, நான் பேசவில்லை என்று சொல்லுறாங்க. கொளத்தூரில் அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் கண்டுடுச்சு... இன்னும் பேசி இருந்தா மக்கள் கொத்து பரோட்டா போட்டு இருப்பாங்க" என்று ஸ்டாலினை கிண்டல் செய்வதுபோல முதல்வர் விஜய் பேசியிருந்தார்.
விஜய் போட்ட அரசியல் ஸ்கெட்ச்.. திமுக-அதிமுக கூட்டணி? கரூர் மேடையில் முதல்வர் சொன்ன பாயிண்டு
அதற்கும் ப்ளூ சட்டை மாறன், "தவெகாவை துறைமுகம் தொகுதியில் தூள் பக்கோடா போட்டதே திமுக... சேப்பாக்கத்தில் சேமியாசம் போட்டதே திமுக... அதைப்பற்றி பேச மாட்டீர்களா? 234 தொகுதிகளில் 126 இடங்களில் தோல்வியடைந்தது.. அங்கே மக்கள் போட்டதும் கொத்து பரோட்டா தானே? என்றும் போஸ்ட் போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications