நாளை இண்டர்வியூ.. சென்னை + பெங்களூர் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலை ரெடி.. செம சான்ஸ்
சென்னை: சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ (நாளை) நடைபெற உள்ளது.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் VAPT பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6+ ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விஏபிடி (Vulnerability Assessment and Penetration Testing)-க்கில் OWASP Top 10, SANS Top 25, WASC, NIST, CISA உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எக்ஸ்ப்பர்ட்டாக இருக்க வேண்டும்.
அதேபோல் வெப் அப்ளிகேஷன் செக்யூரிட்டி டெஸ்ட்டிங், நெட்வொர்க் செக்யூரிட்டி டெஸ்ட்டிங், சோர்ஸ் கோடரிவ்யூ மற்றும் வல்னரபிலிட்டி உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், கிரிட்டிக்கல் திங்கிங் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் உள்ளிட்டவை கட்டாயமாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ரெஸ்யூம் விவரங்களை [email protected] என்ற முகவரிக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும்.
இதற்கான இண்டர்வியூ சென்னை மற்றும் பெங்களூரில் Face to Face முறையில் நாளை (ஜூலை11) நடைபெற உள்ளது. சென்னை என்றால் TCS Ozone Techno Park, No.1/13, Old Mahabalipuram Road (OMR), Navallur, Chennai - 603 103 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பெங்களூர் என்றால் TCS Think Campus in Electronic City is 42 (P) and 45 (P), Think Campus, Electronic City, Phase II, Bengaluru, karnataka 560 100 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் பெங்களூர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here













Click it and Unblock the Notifications