தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை!
சென்னை: சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயருக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிபிஐ மாநில முன்னாள் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தவெக உடனான கூட்டணியில் சிபிஐ இல்லை என்று கூறிய முத்தரசன், ராஜ்ய சபா தேர்தல் தொடர்பாக தவெகவில் இருந்து எங்களிடம் யாரும் ஆதரவு கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கவுள்ள ராஜ்ய சபா இடைத்தேர்தலில் தவெக சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்பின் பிரவீன் சக்கரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னை வந்தார். அப்போது பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை எழுதினார்.

அதில் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டார். இது சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளை கொந்தளிக்க செய்துள்ளது. ஏனென்றால் இந்த இரு கட்சிகளும் தவெக உடன் கூட்டணியில் சேரவில்லை.
இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து முத்தரசன் பேசுகையில், பிரவீன் சக்கரவர்த்திக்கு கூட்டணிக்கான பெயரையும், அந்த கூட்டணியில் எங்களை சேர்க்கவும் யார் அதிகாரம் கொடுத்தது? எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தவெக உடன் நாங்கள் கூட்டணியில் இல்லை. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்.
இந்த கூட்டணியின் பெயருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திமுக உடனான கூட்டணியில் தான் தொடர்கிறோம். ராஜ்ய சபா தேர்தல் தொடர்பாக இப்படியொரு முடிவினை எடுத்துள்ளோம் என்று தவெக சார்பாக யாரும் எங்களுடன் பேசவில்லை. எங்களின் கருத்தையும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வந்த பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சிபிஎம் மற்றும் சிபிஐ அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆதரவு கோரினார். தொடர்ந்து சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தனது பதிவு பிழையானது என்று பிரவீன் சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications