வெற்றியைக் குவிக்கும் கன்னி ராசி.. லாபத்தில் வரும் குரு தரப்போகும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kanni-rasi-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-from-july-6-to-12

ஆனி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூலை 6 முதல் ஜூலை 12 ஆம் தேதி (ஆனி 22 முதல் 28 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியி லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கைகூடும். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். லாப ஸ்தானத்தில் குரு பகவான், 10 ஆம் இடத்தில் சூரியன் புதன் வக்கிரமாக உள்ளது. இதுவரை வராமல் இருந்து வந்த பணங்கள் வந்து சேரும். பெரிய அளவுக்கு பொறுப்புகள் வந்து சேரும். நண்பர்கள், தோழிகள் எல்லோரையும் தள்ளி வைப்பது நல்லது.

சுற்றுலா யோகம்

கழிவுப் பாதை, பின்புறத்தில் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. சுபவிரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பண வரவுகள் வந்து சேரும். ஆன்மீக சுற்றுலா, இன்ப சுற்றுலா செல்லக்கூடிய யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நடக்கும். தெய்வ அனுக்கிரகங்கள் உண்டாகும். முக்கியமான விஷயங்கள் எல்லாம் சரியாக நடக்கும். தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

ஏற்றம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நிறைய பேர் வஞ்சிக்கும் சூழல் ஏற்படும். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும்.

ஆதாயம்

வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் ஆதாயம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். துர்க்கை, வரதராஜ பெருமாள் வழிபாடு சகலவித முன்னேற்றத்தையும் கொடுக்கும். நீண்ட நாட்களாக வேலை, படிப்பு, உத்தியோகம் இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மதிப்பெண்

உறவு முறையில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+