உணவு பாதுகாப்பு தரகுறியீட்டு அறிக்கை.. சாதித்த தமிழகம்.. முதலிடத்தை பெற்று அசத்தல்!
டெல்லி: பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் தொடர்பான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை குஜராத்தும் 3ஆவது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது. மேலும் சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்தையும் மணிப்பூர் இரண்டாவது இடத்தையும் சிக்கிம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அது போல் யூனியன் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர், டெல்லி, சண்டீகர் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. வெற்றி பெற்ற மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை பரிந்துரைத்த 5 காரணிகளை வைத்து உணவு பாதுகாப்பில் மாநிலங்களின் செயல்பாட்டை மாநில உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் ஆய்வு செய்யும். இதை வைத்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் வரிசைப்படுத்தும்.
"மாநிலங்கள் தங்களது மக்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார உணவு பழக்கவழக்கங்களை உறுதி செய்வது முக்கியமான பணி. சுகாதாரமான தேசத்தை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றுபடுவது இந்த சூழலுக்கு தேவையானதொன்று என மத்திய அமைச்சர் மன்சுக் பேசினார்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications