இப்பவே முடியல.. இன்னும் வெப்பம் அதிகரிக்க போகுதாம்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த பகீர் வார்னிங்!
டெல்லி: கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் வெப்பம் கடுமையாக அதிகரித்து வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களில் வெப்பம் நிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பம் தகிக்கத் தொடங்கியுள்ளது. காலையில் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால், பகல் வேளைகளில் வெளியில் சென்று விட்டு வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிடுவதாக மக்கள் புலம்பாத குறைதான். வெளியில் சென்று விட்டாலே வியர்வையில் குளிக்கும் நிலைதான் இருப்பதாக மக்கள் ஆதங்கத்துடன் சொல்லும் அளவுக்கு வெயில் தகிக்க தொடங்கிவிட்டது.

கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் வெப்பம் கடுமையாக அதிகரித்து வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களில் வெப்பம் நிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரபிரதேச கடலோர பகுதிகள், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 4-5 நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பான அளவை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. 13-17 ஆம் தேதிகளில் மேற்கு வங்காளத்தின் ஒரு சில பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவில் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் வெப்ப அலை வீசும்" என்றும் எச்சரித்துள்ளது.
கோவா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்ப நிலை அதிகரிப்பால் நாடு முழுவதும் மக்கள் வெப்ப காலங்களில் பேண வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை, தர்ப்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவைகளும் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதெபோல், பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகள் அணிய வேண்டும். 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியம் இன்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களையும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications