பாகிஸ்தான் பக்கத்துலயே வர முடியாது..இந்தியா ராணுவத்தின் இரும்பு அரக்கன்கள்! நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ பலம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும் மதத்தைக் கேட்டு கேட்டு ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்றதாக தாக்குதலை நேரில் கண்ட ஒரு பெண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயத்தின் லஸ்கர்- இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதை அடுத்து பாகிஸ்தான் உடனான பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்துள்ளது.
குறிப்பாக சிந்து நதிநீரை அடைத்துள்ளது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, வாகா எல்லை மூடப்படுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விமானப்படை, கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டு வருவது இரு நாடுகள் இடையேயான பதட்டத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இரு நாடுகள் இடையேயான ராணுவ பலம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
உலக அளவில் ராணுவ பலத்தில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் 12வது இடத்தில் தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 140 கோடி கொண்ட இந்திய மக்கள் தொகையில் 21 லட்சத்து 97 ஆயிரத்து 117 ராணுவ வீரர்களும், 25 ஆயிரத்து 27 ஆயிரம் துணை இராணுவ படையினரும், ஒரு லட்சத்து 4252 கடற்படை வீரர்களும் மூன்று லட்சத்து 10,575 விமானப்படை வீரர்களும் இருக்கிறார்கள்.
25 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில் 13 லட்சத்து 11 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், சுமார் 5 லட்சம் துணை ராணுவ படையினரும் இருக்கிறார்கள், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 800 கடற்படை வீரர்களும் 78,128 விமானப்படை வீரர்களும் உள்ளன.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றிலும் இந்தியாவே முன்னணியில் இருக்கிறது. இந்தியா வசம் மொத்தம் 2229 விமானங்களும், 513 போர் விமானங்களும், 899 ஹெலிகாப்டர்களும் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 594 கவச வாகனங்களும் இருக்கிறது. மேலும் 421 பீரங்கிகள், 80 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருக்கிறது.
பாகிஸ்தான் வசமோ மொத்தம் 1399 விமானங்களும், 328 போர் விமானங்கள், 373 ஹெலிகாப்டர்கள் 17516 கவச வாகனங்கள், 2627 பீரங்கிகள், 57 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை அக்னி உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள், போர்க்கப்பல்கள், விமானம் தாங்கிக்க கப்பல்கள் ஆகியவை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. போர் என வந்தால் இந்தியா வசம் இருக்கும் ராணுவ பலத்தால் அதன் கையே ஓங்கி இருக்கும் என்கின்றனர் சர்வதேச போர் நிபுணர்கள். அதே நேரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது பாதுகாப்புக்காக 77 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்குகிறது. பாகிஸ்தானோ வெறும் 7.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே ஒதுக்குவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை அதன் கடற்கரையில் 293 கப்பல்கள் இருக்கிறது. பாகிஸ்தானில் 121 போர்க்கப்பல்கள் மட்டுமே இருக்கின்றன. அப்படி தரைப்படை, விமானப்படை, கப்பல் படை என எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் இந்தியாவின் ராணுவ பலமே பாகிஸ்தானை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications