38 விமானங்கள், 300 கார்கள், 66 வயதில் 40 வயது பெண்ணுடன் திருமணம்! இந்த சொகுசுக்கு சொந்தக்காரர் யார்?
டெல்லி: 38 விமானங்கள், 300 கார்கள், 52 படகுகளை வைத்துக் கொண்டு உலக பணக்காரராக உள்ள இந்த மன்னர் யார் தெரியுமா.. அவருடைய சொத்துகளின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டுகளுக்கு மேலாக அரியணையில் ஆட்சிபுரிந்த பூமிபோன் அடுல்ய தேஜ் கடந்த 2016இல் மறைந்தார். இதன் பிறகு அவருடைய மகன் மகா வஜ்ஜிரலொங்கோர்ன் மன்னராக முடிசூடிக் கொண்டார். 70 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மன்னரின் முடிசூட்டு விழா என்பதால் தாய்லாந்தே களைகட்டியது.

இவருக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமான நிலையில் கடந்த 2014 இல் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த 2019இல் அதாவது 5 ஆண்டுகளுக்கு பின்னர் தன்னை விட 26 வயது வயது குறைவான சுஜிதா திட்ஜாய் எனும் பெண்ணை திருமணம் செய்தார். இவரை திருமணம் செய்த பெண் தாய் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றி வந்தார்.
அங்குதான் மன்னர் அந்த பெண்ணை முதலில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பெண் மன்னரின் பாதுகாப்பு படையில் சேர்ந்தார். 2013 இல் துணை கமாண்டர் ஆனார். இதைத் தொடர்ந்து 2016இல் தாய் ராணுவத்தில் சேர்ந்து ராயல் தாய் எனும் உயர் பதவியை அடைந்தார். இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் நடந்தது.
மன்னர் 10 ஆவது ராமா என அழைக்கப்படுகிறார். இவரது சொத்து மதிப்புகள்தான் தற்போது வைரலாகி வருகின்றன. இவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். அரச குடும்பத்திலும் இவரே பணக்கார மன்னராக திகழ்கிறார். இவரிடம் விலை உயர்ந்த வைரங்கள், ரத்தினங்கள் உள்ளன.

இவரிடம் நிறைய நிலங்கள் உள்ளன. இவரிடம் 38 விமானங்கள், 300 கார்கள், 52 படகுகள் உள்ளன. மன்னர் வஜ்ஜிரலொங்கோர்னின் சொத்துகள தாய்லாந்து முழுவதும் பரவியுள்ளன. தாய்லாந்து அரசு குடும்பத்தின் சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்குமாம். அதாவது இந்திய மதிப்பில் 3.2 லட்சம் கோடி.
தாய்லாந்தில் மட்டுமே 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் என பல அரசு கட்டடங்கள் இவருக்கு சொந்தமானதுதான். தாய்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான சியாம் கமர்ஷியல் வங்கியில் மன்னருக்கு 23 சதவீத பங்குகள் உள்ளன. மன்னர் வஜ்ஜிரலொங்கோர்னின் கிரீடத்தில் உள்ள ரத்தினத்தின் ஒன்று 545 காரட் பழுப்பு நிற கோல்டன் ஜூபிலி வைரமாகும். இதன் மதிப்பு ரூ 98 கோடியாகும். இது உலகின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த வைரமாகும்.
இவர் விமானங்களின் பராமரிப்பிற்காக மட்டுமே ஆண்டுக்கு ரூ 524 கோடி செலவிடுகிறார். இவருக்கு சொந்தமான 52 படகுகளில் தங்க வேலைப்பாடு உள்ளன. மன்னரின் அரண்மனை 23.5 லட்சம் சதுர அடி பரப்பளவாகும். இந்த அரண்மனை 1782 இல் கட்டப்பட்டது. ஆனால் இங்கு மன்னர் வஜ்ஜிரலொங்கோர்ன் வசிக்கவில்லை. இந்த அரண்மனையில் அரசு அலுவலகங்களும் அருங்காட்சியகங்களும் உள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications