செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் போட்டு இருக்கீங்களா.. உடனே இதை பண்ணுங்க.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: பெண் குழந்தைகளுக்கான சுகன்யாக சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி அளிக்கப்படுவதால், முறைகேடாக ஒரு பெண் குழந்தை பெயரில் இரண்டு சேமிப்புகளை தொடங்கி உள்ளார்கள்.அப்படி தொடங்கப்பட்ட இரு சேமிப்பு கணக்குகளில் ஒன்றை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள முறைகேடான கணக்குகளை நீக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் சுகன்யாக சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தையின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை பொறுத்தவரை ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சேமிப்பை கணக்கை ஆரம்பிக்கலாம்.
ஒருவேளை முதல் பிரசவத்திலோ அல்லது 2-வது பிரசவத்திலோ இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் 2-க்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு நிகரான வட்டி விகிதம் எந்த திட்டத்திற்கும் கிடையாது. வங்கிகளில் சேமித்தாலும், எப்டியில் போட்டாலும் இவ்வளவு சேமிப்பு வேறு எதிலும் இல்லை..
இதன் காரணமாக பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினர் ஆர்வமுடன் இந்த சேமிப்பு கணக்கை தொடங்கினார்கள். 100 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தையின் பெயரில் போட முடியும் என்பதால், ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலகத்திற்கு வந்து தங்களின் சேமிப்பை இதில் தான் பல தாய்மார்கள் சேமிக்கிறார்கள். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்டு மாத இறுதி வரை 4 கோடியே 85 ஆயிரத்து 942 சேமிப்பு கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 466 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாடு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 36 லட்சத்து 92 ஆயிரத்து 712 சேமிப்பு கணக்குகள் மூலம் 25 ஆயிரத்து 853 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கிகள், தபால் அலுவலகங்களில் நிரந்தர, தொடர் வைப்புத்தொகை போன்றவற்றுக்கு வழங்கப்படும் வட்டியை விட கூடுதல் வட்டி வழங்கப்படுவதால் ஒரே குழந்தையின் பெயரில் இரு கணக்குகள் தொடங்கப்படுவது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.. தாய் தனியாகவும், தந்தை தனியாகவும், தங்களது மகள் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி சேமித்து வருகிறார்கள்.
ஆனால் செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை பொறுத்தவரை ஒரு குழந்தையின் பெயரில் ஒரே ஒரு சேமிப்பு கணக்குதான் தொடங்கப்பட வேண்டும் என 2019-ம் ஆண்டு மத்திய அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் அதையும் மீறி இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதற்காக முறைகேடாக சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் கணக்குகளை நீக்கி செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் பெயரில் ஒரே ஒரு சேமிப்பு கணக்குதான் இருக்க வேண்டும் என்றும், மாறாக இரு சேமிப்பு கணக்குகள் இருக்கும்பட்சத்தில் அதில் ஒரு சேமிப்பு கணக்கை திரும்பப்பெற வேண்டும் என்றும் , தபால் அலுவலகங்கள், வங்கிகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள முறைகேடான கணக்குகளை அக்டோபர் 1-ந் தேதிக்குள் நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, முறைகேடாக தொடங்கப்பட்ட ஏராளமான செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தபால் அலுவலகங்கள், வங்கி நிர்வாகங்கள் நீக்கி வருகின்றன. தற்போதைய நிலையில் நீக்கப்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருப்புத்தொகை வேறு சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்பட உள்ளது. இதுவரை இரு கணக்குகளில் ஒரு சேமிப்பு கணக்கை நீக்காதவர்களுக்கு, முதல் ஒரு கணக்கிற்கு மட்டுமே 8.2 சதவீத வட்டி கணக்கிடப்பட உள்ளதாவும். மற்றொரு கணக்கிற்கு எந்தவித வட்டியும் கணக்கிடப்படாது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications