"பச்சை கொடி".. 4 ஏசி கோச் + 4 ஏசி சேர்.. இந்தியா - பங்களாதேஷ் இடையே 3வது ரெயில் சேவை இன்று துவக்கம்
இந்தியா - வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரெயில் சேவை இன்று முதல் துவக்கம்
டெல்லி: இந்தியா - வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரெயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது... இதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து, இந்த 2 நாட்டு ரயில்வே அமைச்சர்களும் கொடியசைத்து இன்று தொடங்கி வைக்க போகிறார்கள்.
இந்தியா-வங்காளதேசம் இடையிலான பயணிகள் ரெயில் சேவை, கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், இந்த 2 நாடுகளுக்கு இடையிலான ரெயில் சேவை மறுபடியும் பழையபடி தொடங்கி நடந்து வருகிறது..

3வது ரயில் சேவை
அதேபோல, கொல்கத்தா - டாக்கா இடையிலான மைத்ரி விரைவு ரெயில் சேவையும் 2 வருட காலத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது.. இந்நிலையில், இந்தியா-வங்காளதேசம் இடையிலான ரெயில் இணைப்பை அதிகரிக்கும்விதமாக, மேலும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க 2 நாட்டு ரயில்வே நிர்வாகமும் முடிவு செய்தது.. எனவே, இன்றைய தினம், அதாவது ஜுன் 1-ந் தேதி முதல் மேற்கு வங்காளத்தின் புது ஜல்பைல்குரியில் இருந்து டாக்காவுக்கு மித்தாலி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டது.

கொடியசைத்து துவக்கம்
அதன்படி, இந்தியா-வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரெயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.. சிலிகுரி, இந்தோ-வங்காளதேச ரயில் சேவை, "மிதாலி எக்ஸ்பிரஸ்", இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து டாக்காவிற்கு இன்று முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது... டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து, 2 நாட்டு ரயில்வே அமைச்சர்களும் இதற்காக கொடியசைத்து இன்று தொடங்கி வைக்க போகிறார்கள்.

எக்ஸ்பிரஸ் ரயில்
இது மூன்றாவது இந்திய-வங்காளதேச ரெயில் சேவை என்ற பெருமையை சேர்க்கிறது.. நியூ ஜல்பைகுரி-டாக்கா கண்டோன்மென்ட் ரயில், எண் 13132, வாரத்தில் 2 நாட்கள், அதாவது, ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும் மற்றும் திரும்பும் பயணத்திற்கு, ரயில் எண் 13131, டாக்கா கண்டோன்மென்ட்-புதிய ஜல்பைகுரி, மிதாலி எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் அன்றும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி கோச்கள்
அதேபோல, இந்த ரயில் நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா இடையே 513 கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது மணி நேரத்தில் கடக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 4 ஏசி கேபின் கோச்சுகள் மற்றும் 4 ஏசி நாற்காலி இருக்கையுடன், டீசல் இன்ஜின் மூலம் இந்த ரயில்சேவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.. எனவே, இரு நாட்டு பயணிகளுக்கும் இந்த ரயில், வரப்பிரசாதமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications