இது வாக்கிங் ஸ்டிக் அல்ல! நெற்றி நிறைய திருநீரோடு பிரதமர் மோடி சொன்ன வார்த்தை-நெகிழ்ந்த ஆதீனங்கள்
டெல்லி: டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட உள்ள நிலையில் அதனை இன்று தஞ்சாவூர் திருவாவடுதுறை ஆதீனம் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததோடு செங்கோல் பற்றி பேசியது ஆதீனங்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் முக்கோண வடிவில் பிரமாண்டமாக இந்த நாடாளுமன்ற கட்டடம் கட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியபோது ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் ஒப்படைக்கும் வகையில் இந்த செங்கோலை வழங்கி இருந்தனர்.
இந்த செங்கோல் தஞ்சாவூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மூலம் சென்னையைச் சேர்ந்த வும்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் ஆகியோர் செங்கோலை உருவாக்கினர். இந்த செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம் வழங்கினார். இந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் பிரக்யாராஜ் மியூசியத்தில் இருந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.

இந்நிலையில் தான் இன்று செங்கோலை பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கினார். மேலும் நெற்றியில் திருநீர் பூசி ஆசீர்வாதம் செய்தனர். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய இணையமைச்சர் முருகன் உடனிருந்தார்.
மேலும் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவுக்கு தமிழகத்தில் இருந்து சென்ற 21 ஆதீனங்களும் பங்கேற்றனர். அதன்பிறகு நெற்றி நிறைய திருநீறுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உங்களை வணங்கி வாழ்த்துகிறேன். என் இல்லத்துக்கு நீங்கள் வந்திருப்பது என் அதிர்ஷ்டம். சிவன் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய சின்னமான செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை இந்த செங்கோல் நினைவுப்படுத்தி கொண்டே இருக்கும். இந்தியா எந்த அளவுக்கு ஒற்றுமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் வலுவாக வளர்ச்சியின் பாதையில் இருப்போம். இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஆன்மீக பலம் இந்த சவால்களை எதிர்கொள்ள உதவும்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்த புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதை அளிதக்கப்படவில்லை. இதனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜில் வாக்கிங் ஸ்டிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த செங்கோல் அப்போதே நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உங்கள் சேவகரான நான் செங்கோலை அங்கிருந்து வெளியே எடுத்து வந்து நாடாளுமன்றத்தில் நிறுவ உள்ளேன்'' என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications