தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? இன்று முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தமிழக அரசு இன்று முடிவெடுக்கவுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

+2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மே 4ம் தேதி முதல் 21ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் +2 தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள். சுகாதாரத் துறை வல்லுநர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முக்கிய ஆலோசனை
இருப்பினும், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து முடிவு செய்ய இன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை, உள் துறை வருவாய் துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் +2 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்
முன்னதாக, கொரோனாோ பாதிப்பு அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு நேற்று அறிவித்தது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 10ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,970 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மாநிலத்தில் 54,315 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications