ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணமே விஜய் லேட்டா வந்தது தான்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
டெல்லி: "அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம். விஜய் பகலில் வருவதாக கூறியதால் காலை 7 மணி முதலே கரூரில் பொதுமக்கள் காத்திருந்தனர்." என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்டத்தின்போது, கடுமையான நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகினர். 110 பர் படுகாயமடைந்தனர். இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்துவது மட்டும் போதாது, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று விசாரணை தொடங்கிய நிலையில், தவெக தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தவெக தரப்பில், சம்பவம் நடந்தபோது, விஜய் அங்கிருந்தால், மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நேரிடலாம் என்பதால், காவல்துறையினர்தான், விஜய் அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாலேயே, சம்பவ இடத்திலிருந்து தவெக தலைவர் விஜய் அங்கிருந்து வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களையும் தவெகவினர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என வாதம் வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால், நியாயமான விசாரணை வேண்டும், உச்சநீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் வாதிடுகையில், "அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம். விஜய் பகலில் வருவதாக கூறியதால் காலை 7 மணி முதலே பொதுமக்கள் காத்திருந்தனர். உயர் நீதிமன்றம்தான் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. குழுவில் உள்ள அதிகாரிகளை சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
-
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications