பொன்முடி விவகாரம்:கடும் கண்டனங்கள் எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக ஆளுநர் ரவி!
டெல்லி: பொன்முடிக்கு தமிழ்நாடு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்காக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மன்னிப்பு கேட்டார். மேலும் பொன்முடிக்கு அமைச்சராக இன்று பதவி பிரமாணம் செய்து வைப்பதாகவும் உச்சநீதிமன்றத்துக்கு ஆளுநர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது பொன்முடியின் தண்டனையையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் ஒருவர் தனது பதவியை இழப்பார். அது போல்தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் பொன்முடி தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை இழந்தார்.

இந்த நிலையில் திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை பொன்முடி வழக்கில் அளித்தது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி திரும்ப கிடைத்துவிட்டது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டது.
இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலுடன் முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் ஆளுநரோ பொன்முடியின் தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது குற்றவாளிதான் எனவே அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என கறாராக கூறிவிட்டார். இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களை தெரிவித்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க நாளை வரை (அதாவது இன்று வரை) கால அவகாசம் வழங்குகிறோம். பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் தமது முடிவை தெரிவிக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை. தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் எதன் அடிப்படையில் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தெரிவித்திருந்தார் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கான உரிமையை அவருக்கு யார் கொடுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் ரவி மீறிவிட்டார். ஆளுநர் அரசியல் சாசனத்தை பின்பற்றாத போது மாநில அரசு என்ன செய்யும். ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் சரியில்லை, ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். ஒருவரின் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவருக்கு தண்டனையே விதிக்கப்படவில்லை என்பதுதானே அர்த்தம். அப்படியிருக்கும் போது பொன்முடியை எப்படி கறைபடிந்தவர் என கூறமுடியும் என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த நிலையில் பொன்முடி விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க ஆளுநர் ரவிக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் திடீர் திருப்பமாக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். அத்துடன் இந்த தகவலை உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமது நடவடிக்கைக்காக உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இத்தகவலை ஆளுநர் ரவி சார்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications