இன்று என்ன நாள் தெரியுமா? மொத்த இந்தியர்களுக்கும் ஷாக் தந்த பிரதமர் மோடி! 7 ஆண்டு ஆயிடுச்சாமே! ஆஹா
டெல்லி: இன்று 2013 நவம்பர் 8 ம் நாள்.. பலருக்கும் இன்றைய தினம் பிற நாட்களை போல் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இந்தியரால் மறக்க முடியாத ஒரு நவம்பர் 8 ம் தேதி உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது என்னவென்று கேட்டால் நீங்கள் ஒரு 7 ஆண்டு பின்நோக்கி செல்ல வேண்டும்.
ஆம், 2016 நவம்பர் 8 ம் தேதியை தான் கூறுகிறோம். அன்றைய தினம் காலையில் மக்கள் அனைவரும் எழுந்து தங்களின் பணிகளுக்கு சென்றனர். மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

மாலையில் வீடு திரும்பிய அவர்கள் உழைத்த மற்றும் படித்த களைப்பில் கொஞ்சம் டிவியை பார்த்து ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தபோது தான் வந்தது ஒரு அறிவிப்பு.
அதாவது பிரதமர் நரேந்திர மோடி இரவு 8.15 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற போகிறார் என்ற தகவல் திடீரென வேகமாக பரவியது. பலருக்கும் இது புரியாத புதிராக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம், குடியரசு தினத்தை போல் உரையை நிகழ்த்துவார் என சிலர் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு இருந்தது. அதோடு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு என்பது ஒரு நொடியில் ஒட்டுமொத்த இந்தியர்களையும் திகைக்க வைத்துவிட்டது என்றே கூறலாம்.
ஆம், 2016 நவம்பர் 8 தான் இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளாகும். அதாவது நாட்டில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கூறிய தினமாகும். இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொண்டு இன்றுடன் 7 வது ஆண்டு ஆகிறது. அன்றைய தினம் அதாவது 2016 நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூறியதாவது:
‛‛தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடனும், புதிய நம்பிக்கை உடனும் கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்று சில முக்கியமான பிரச்சினைகள் மற்றும் முக்கியமான முடிவுகளைப் பற்றி நான் உங்களிடம் பேசுவேன். மேலும் ஒரு வேண்டுகோள் ஒன்றையும் வைக்க விரும்புகிறேன். 2014ல் நீங்கள் என்னிடம் கடினமான பொறுப்பை ஒப்படைத்தனர்.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே 125 கோடி இந்தியர்களின் ஆதரவுடன் உலக பொருளாதாரத்தில் இந்தியா நல்ல நிலையை தற்போது எட்டியுள்ளது. இதை நான் சொல்லவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியே தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ஒரு நாட்டின் வளர்ச்சி மீது தீர்க்கமான நடவடிக்கை தேவை.
ஊழல் மற்றும் கருப்பு பண குவியலை உடைக்க வேண்டும். இதனால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டில் இருக்காது. இந்த நோட்டுகளின் சட்டபூர்வமான டெண்டர் இனி இருக்காது'' என்றார். இதன்மூலம் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அவர் அறிவித்தார். அன்றைய தினம் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 85 சதவீதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகளாக இருந்த நிலையில் அதனை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த தினம் தான் இன்று.
இதையடுத்து மக்கள் வங்கி வாசலில் நீண்டநேரம் காத்திருந்து தங்களிடம் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மாற்றினர். அதன்பிறகு குறிப்பிட்ட காலஅவகாசத்துக்கு பிறகு பிரதமர் மோடி செல்லாது என அறிவித்தப்படி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் முற்றிலுமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. இந்தியாவில் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததன் 7 வது ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும். அதன்பிறகு இந்தியாவில் ரூ.2000 நோட்டு மற்றும் புதிய ரூ.500 நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. மேலும் தற்போது ரூ.2000 ரூபாய் நோட்டும் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications