ஒன்னு கூடிட்டாங்களே! அனல் தெறிக்கும் “அதானி மேட்டர்”.. அடங்காத பாஜக! 18 எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை
ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் காரணமாக அதானி குழும பங்குகள் பன்மடங்கு சரிந்து எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதானி மீதான மோசடி புகார் மற்றும் அவரது நிறுவன பங்குகளின் சரிவு தொடர்பாக இன்று 18 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூடி ஆலோசிக்க இருக்கின்றன.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 வது இடத்தில் இருந்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி போலியான நிறுவனங்களை தொடங்கி தன்னுடைய பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டியதாக வெளியான தகவல் ஒரு மாதமாக இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தை உலுக்கி உள்ளது.
இந்த பாணியை பின்பற்றியே அதானி உலகின் 2 வது பெரும் பணக்காரரானதாக ஹிட்டன்பெர்க் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கவுதம் அதானி
குஜராத்தை சேர்ந்த கவுதம் அதானி சோலார் மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், ஊடகம், ஆடை, எண்ணெய் வர்த்தகம் என பல துறைகளில் கொடிகட்டிப் பறந்து உலகின் பெரும் பணக்காரராக உயர்ந்தார். இவர் இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து இருக்கிறார்.

ஹிண்டன்பர்க் ஆய்வு
அதேபோல் இந்திய மக்களின் காப்பீட்டு பணத்தில் இயங்கும் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் அதானி நிறுவனத்தின் பங்குகளில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து இருக்கிறது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் காரணமாக தொடர்ந்து அதானி குழும பங்குகள் பன்மடங்கு சரிந்தன.

எல்.ஐ.சிக்கு இழப்பு
இதன் காரணமாக எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. அதானியும் உலக பணக்காரர்கள் வரிசையில் 35 வது இடத்திற்கு கீழ் சரிந்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் இருந்தே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்ற கூட்டம்
இந்த நிலையில், திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2 வது அமர்வு கூடி இருக்கிறது. இதிலும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்க சொல்லி பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி எம்பி
தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கினார்.

காங்கிரஸ், திரிணாமூல்
அதேபோல் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்களோ அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஆம் ஆத்மி, பிஆர்எஸ் கட்சி எம்பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை
இந்த நிலையில் அதானி விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க நாளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. 18 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு குறிவைப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications