ஒரு கிலோ தக்காளி விதையின் விலை ரூ 3 கோடியாம்.. 5 கிலோ தங்கம் வாங்கலாமே!
டெல்லி: ஒரு கிலோ விதைக்கே இப்படி பதறுறோமே , ஒரு கிலோ தக்காளி விதைகள் ரூ 3 கோடி ரூபாயாம். அப்படி என்னதான் அந்த தக்காளியில் இருக்கு?
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ 100 முதல் 150 வரை விற்கப்படுகிறது. தக்காளியை யாரும் பதுக்கக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசுகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே தங்கம், வெள்ளி விலை, பெட்ரோல் டீசல் விலை , அரிசி பருப்பு விலை, எண்ணெய் நெய் விலை, பால் தயிர் விலை, தக்காளி இஞ்சி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தக்காளி விதையின் விலை ஒரு கிலோ ரூ 3 கோடிக்கு விற்பனையாகிறதாம்.
என்ன கேட்டதும் தலையே சுத்துகிறதா. அதாவது ஒரு கிலோ தங்கத்தை விட இந்த தக்காளி விதையின் விலை 5 மடங்கு அதிகம். அதாவது இந்த ரூ3 கோடியில் 5 கிலோ தங்கத்தை வாங்கலாம். அப்படி என்ன அந்த தக்காளியில் இருக்கிறது என்பதை பார்ப்போம். இந்த தக்காளிகளை ஹசேரா ஜெனிடிக்ஸ் என்ற நிறுவனம்தான் விற்பனை செய்கிறது.
ஐரோப்பிய சந்தைகளில் கோடை காலத்தில்தான் இந்த தக்காளி விதைகள் பற்றாக்குறையாக இருக்குமாம். இதனால் அதன் விலையும் அதிகமாகவே இருக்குமாம். ஒவ்வொரு தக்காளி விதைகளில் இருந்து 20 கிலோ தக்காளியை உற்பத்தி செய்யலாம். இந்த தக்காளியின் விலையும் காஸ்ட்லிதான். இந்த தக்காளியில் விதைகளே இருக்காதாம்.
புதிதாக தக்காளியை விளைவிக்க புதிய விதைகளைத்தான் பயன்படுத்த வேண்டுமாம். இதன் விலை அதிகரித்துள்ள நிலையிலும் இதன் தனிப்பட்ட வாசனைக்காகவே மக்கள் இதை விரும்பி வாங்குகிறார்கள். ஒரு முறை இந்த தக்காளியை சுவைத்து பார்த்து அவர்களுக்கு பிடித்துவிட்டால் அதை விடவே மாட்டார்களாம்.
ஹசேரா ஜெனிடிக்ஸ் என்ற நிறுவனம் ஆராய்ச்சி, உற்பத்தி, செயலாக்கம், தரம் ஆகியவற்றில் அதன் செயல்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விதைகள் வணிக தரம் வாய்ந்ததா இல்லையா என்பதை உறுதி செய்ய முழுமையான தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளை நடத்துவதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications