பாஜக செய்ததை எல்லாம்.. விசாரிக்க போறோம்! பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாகிய காங்கிரசின் டாப் 10 அறிவிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 அறிவிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் நாடு முழுக்க சூடு பிடித்துள்ளது. இதையடுத்து இன்று வெளியானது லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப சிதம்பரம் தேர்தல் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

1. பாஜக செய்த முறைகேடுகள் எல்லாம் விசாரிக்கப்படும். பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும். இதனால் விசாரணை ஆணையம் அமைத்து நேர்மையான விசாரணை நடக்கும்.
2. பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் மீதான வழக்குகள் தூசு தட்டப்படும்.
3. பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும். மாநிலங்களிடம் இதற்காக ஆலோசனை நடத்தப்படும்.
4. செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலங்களிடம் பிடுங்கப்பட்ட நிதிகள் மீண்டும் வழங்கப்படும்.
5. 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6.நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம். மாநிலங்களில் விருப்பப்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
7. நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
8. 100 நாள் வேலைத்திட்டத்தின் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் என்பது நாளொன்றுக்கு ரூ.400 என்பது உறுதி செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் . மாநிலம் வாரியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
9. ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது; தேர்தலில் பழைய முறையே தொடரும். பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும்.
10. மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். அங்கன்வாடிகளில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications