மாநிலங்களவையில் கிடைத்த ஒரு நிமிடத்தை பக்காவாக பயன்படுத்திய திருச்சி சிவா! பாராட்டிய வெங்கய்ய நாயுடு
டெல்லி: பெண்கள் தினத்தில் அவர்களுக்கு சரியான நீதி கிடைக்க சானிட்டரி நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசும் மாநில அரசுகளும் தன்னார்வல அமைப்புகளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நேற்றைய தினம் மகளிர் தின விழா குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றது. அதில் மாநிலங்களவையில் நடந்த ஒரு விவாதத்தின் மீது திமுக எம்பி திருச்சி சிவா பேசியது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து திருச்சி சிவா எம்பி மாநிலங்களவையில் பேசுகையில் சர்வதேச மகளிர் தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

33 சதவீத இடஒதுக்கீடு
இந்த நாளில் நாம் ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும். அதாவது பெண்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் எதையாவது செய்ய வேண்டும். இந்த அவையில் ஒவ்வொருவரும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேசியிருந்தனர். இது நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகளை சார்ந்தது.

சானிட்டரி நாப்கின்
ஆனால் ஒரு அரசாக நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்த நாளில் சானிட்டரி நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். இதுதான் அவர்களுக்கு இந்தவிழாவில் சரியான நீதியாக இருக்கும். ஏனென்றால் சானிட்டரி நாப்கின்களின் மீது ஜிஎஸ்டி விதித்து தற்போது விலையுயர்வால் ஏழை, நடுத்தர பெண்கள், கிராமப்புற பெண்கள் அதை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து
இதனால் நாப்கின்களுக்கு மாற்றை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பெண்கள் தினத்தில் நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கினால் அது பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்றார். உடனே மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, நல்லது சிவா, நல்ல ஆலோசனை என பாராட்டினார்.

12 சதவீதம் ஜிஎஸ்டி
சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனால் பாலியல் தொழிலாளிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுக்கின்றன. ஆனால் மத்திய அரசோ கடந்த பொது பட்ஜெட்டில் நாப்கின்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கவோ குறைக்கவோ செய்யாமல் வைரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுக்கு வைரம் முக்கியமா சானிட்டரி நாப்கின் முக்கியமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications