டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முகத்தில் மோடி முகமூடி… கையில் தடி.. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நூதன போராட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி:குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1955ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குடியுரிமைச்சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதனையடுத்து கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவனது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

trinamool congress mps demonstrated inside the parliament complex against the citizenship bill

அதற்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமைச் சட்ட மசோதாவில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அந்த கட்சிகள் வலியுறுத்தின. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும் லோக்சபாவில் குரல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அக்கட்சியின் எம்பி ஒருவர் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட முகமூடியை அணிந்து கொண்டார்.

பின்னர், கையில் தடி ஒன்றை எடுத்துக்கொண்டு, தரையில் அமர்ந்திருக்கும் மற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களை அடுத்து விரட்டுவதை போல பாவனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு வலி தாங்காமல் கதறுவது போலவும் எம்பிக்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

English summary
TMC MPs don Modi mask, turn actors to protest Citizenship Bill inside Parliament complex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X