ஆதாரமே இல்லை.. மீண்டும் இந்தியாவை இழுக்கும் ட்ரூடோ.. காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரம்! சர்ச்சை
டெல்லி: இந்தியா கனடா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் போக்கே நிலவி வருகிறது. கனாடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சுற்றி வளைத்து சுட்டு தள்ளினர். இதில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதே இதற்கு முக்கிய காரணம்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜர்: இந்தியாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி ஆவர். இந்தியாவில் பயங்கரவாதியாக இருந்தாலும் அவர் கனடாவில் சுதந்திரமாகவே இருந்து வந்தார். ஏனென்றால் இந்தியாவில் காலிஸ்தான் பிரிவிணைவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கனடாவில் இதுபோல எந்தவொரு தடையும் இல்லை. இதனால் அவர் அங்கே சுதந்திரமாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பையும் நடத்தி வந்தார்.
இந்தியா கனடா மோதல்: இந்தச் சூழலில் அவரை அடையாலம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றதற்கும் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதே இதற்கு முக்கிய காரணமாகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கைகளை எடுத்தன. முதலில் இரு நாடுகளில் இருந்தும் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மீண்டும் சர்ச்சை: எந்தவொரு கனடா நாட்டவருக்கும் மறு அறிவிப்பு வரும் வரை விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என்று இந்தியாவும் அறிவித்தது. இப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று எக்ஸ் பக்கத்தில் சில பரபர கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். ஐக்கிய அரபு அதிபர் முகமது பின் சயீத்துடன் இந்தியா குறித்தும் சட்டத்தின்படி ஆட்சியை நடத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று ஐக்கிய அமீரக அதிபர் முகமது பின் சயீத்துடன் தொலைப்பேசி வாயிலாக உரையாடினேன்.. இஸ்ரேல் நாட்டில் தற்போது நிலவும் நிலைமை குறித்து இருவரும் பேசினோம். இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் கவலைகளை வெளிப்படுத்தினோம். அங்குள்ள மக்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி விவாதித்தோம். மேலும், நாங்கள் இந்தியா பற்றியும், சட்டத்தின்படி ஆட்சி நடப்பதை மதிப்பது குறித்தும் பேசினோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஆதாரம் எங்கே: ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தின் போது பேசிய ட்ரூடோ, "கனடா சட்டத்தின்படி ஆட்சி செய்யும் ஒரு நாடு. கனடா மண்ணில் கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது" என்று கூறியிருந்தார். அதைக் குறிப்பிடும் வகையிலேயே ட்ரூடோ இப்படி ட்வீட் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கனடா எந்தவொரு ஆதாரமுமே இல்லாமல் இந்தியாவைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 5 ஐஸ் உளவு அமைப்பில் இருந்து கனடாவுக்கு உளவு தகவல்கள் கிடைத்தாக கூறப்படுகிறது. இருப்பினும், அது என்ன மாதிரியான உளவு தகவல்கள் என்பதை கூட பொதுவெளியில் சொல்ல கனடா தொடர்ந்து மறுத்தே வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications